»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தங்களது படங்களில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவை கமலும், தாணுவும் அணுகியுள்ளனர்.

கமல் கதை, திரைக்கதை வசனம் எழுதிய ஆளவந்தான் படத்தை தாணு தயாரித்தார். ஹாலிவுட்டிற்கு நிகரான பிரம்மாண்டகாட்சியமைப்புகளுடன் படம் தயாரானது.

கமல் படம் என்பதால் தாணு கணக்கு பார்க்காமல் ரூ.20 கோடிக்கும் அதிகமாக பணத்தை வாரியிறைத்தார். ஆனால் அவ்வளவு செலவுசெய்தும், படம் பணால் ஆகிவிட்டது.

படத்தின் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்து, கமல்ஹாசன் மீது புகார்களை அடுக்கினார் கலைப்புலி தாணு. சரியான திட்டமிடல்எதுவும் இல்லாமல் கமல் பணியாற்றியதால், ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது என்று தாணு கூறினார்.

ஆனால் அவரது புகார்களை ஆணித்தரமாக மறுத்தார் கமல். சில வார சலசலப்புக்குப் பிறகு அந்த சர்ச்சை ஓய்ந்தது.

இப்போது இருவரும் மீண்டும் ஒரு மோதலில் இறங்கியுள்ளனர். இது பழைய மோதலின் தொடர்ச்சி அல்ல. இந்தி நடிகை பிபாஷாபாசுவைப் பிடிப்பதற்காக ஏற்பட்டுள்ள மோதல்.

கமல் தயாரிக்கும் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் மனிஷா கொய்ராலா நடிக்கிறார். படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிப்பதற்காகபிபாஷா பாசுவை முயற்சித்து வருகிறார் கமல்.

அதேபோல விஜய் நடிக்கும் தனது சொந்தப் படமான சச்சினில் நடிக்க வைப்பதற்காக பாசுவை அணுகியுள்ளார் கலைப்புலி தாணு. அந்தப்படத்திலும் ஹீரோயின் பிபாஷா அல்ல. பாய்ஸ் கதாநாயகி ஹரிணிதான் விஜய்யுடன் டூயட் பாடுகிறார்.


இருவரிடமும் ரூ. 75 லட்சம் வரை சம்பளம் கேட்டுள்ளார் பாசு. இதனால் தாணு கொஞ்சம் யோசித்து வருகிறார். ஆனால் கமல் சம்பளத்தைகொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு பாசுவிடம் கூறியுள்ளார், பரிசீலிப்பதாக பிபாஷாவும் தெரிவித்துள்ளாராம்.

யார் அதிக சம்பளம் கொடுப்பார்களோ அவரின் படத்திற்கு பிபாஷா முன்னுரிமை கொடுக்கவுள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இருவரும் இவ்வாறு போட்டி போட்டு, பிபாஷாவை புக் செய்யத் துடிப்பதற்கு காரணம் இருக்கிறது. பாலிவுட்டில் பிபாஷா ஒரு கிளாமர்ராக்கெட். இவரை தங்களது படத்தில் வளைத்துப் போட்டால் படத்தின் மார்க்கெட் வேல்யூ தானாகவே ஏறிவிடும் என்று கமலும், தாணுவும்கணக்கு போடுகிறார்கள்.

பிபாஷா சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் எதையும் மறைக்காதவர். இவர் தற்போது பாலிவுட்டில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும்ஜான் ஆப்ரஹாமைக் காதலித்து வருகிறார்.

டிவி, பத்திரிக்கை, இணையதளம் என்று எதற்கு பேட்டி கொடுத்தாலும் ஜான் ஆப்ரஹாமை காதலிப்பதை மறைக்காமல் கூறி வருகிறார்.

நாங்கள் இரண்டு பேரும் தீவிரமாகக் காதலித்து வருகிறோம். இப்போது சினிமாவில் இரண்டு பேரும் பிஸியாக இருக்கிறோம். நிறையபடங்கள் கையில் இருக்கிறது.

அவற்றையெல்லாம் முடித்தபின்புதான் கல்யாணத்தைப் பற்றி யோசிக்க முடியும். குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களுக்கு கல்யாணம்செய்து கொள்ள முடியாது என்று வெளிப்படையாகக் கூறிவருகிறார்.

இதை ஜோதிகா, ஸ்னேகா, நமிதா கொஞ்சம் கவனிக்கவும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil