»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அடுத்த படத்துக்கு தயாராகிறார் சூர்யா

அமர்க்களம் படத்தைத் தொடர்ந்து வெங்கடேஸ்வராலயம் பிக்சர்ஸ் நிறுவனம் சூர்யாவை வைத்து புதிய படத்தைத் தொடங்க உள்ளது.


விஜயகாந்த் நடிக்கும் தவசி

விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கும் புதிய படத்தின் பெயர் தவசி. வித்தியாசமான, மாறுபட்ட வேடத்தில் இதில் விஜயகாந்த் நடிக்க அதை புதியஇயக்குநர் உதயசங்கர் இயக்குகிறார்.

தவசி படத்தின் துவக்க விழா அண்மையில் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதற்காக 225 வாழை மரங்களை நட்டு வைத்து புதுமை செய்திருந்தனர்.பூஜை நடந்த இடத்தில், ஓலை வேயப்பட்டிருந்தது, வெயிலுக்கு நல்ல இதமாக இருந்தது.

ஏவிஎம் தயாரிக்கும் படத்தில் அஜித்

ஏ.வி.எம். நிறுவனம் நீண்ட காலமாக தனது பெரிய திரை தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது. சின்னத் திரையில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாகஇவர்கள் பெற்றிருக்கின்றனர்.

இப்போது ஸ்டார் சுப்ரீம் என செல்லமாக இன்டஸ்டிரியில் அழைக்கப்படும் அஜீத்தை வைத்து புதிய படத்தை எடுக்கவிருக்கிறார்கள். இதற்கான கதைவிவாதம் ஏ.வி.எம்மில் இடைவிடாமல் நடந்து வருகிறது.

பூங்காவுக்கு வாங்க!

கிஷ்கிந்தா எம்.ஜி.எம். பொழுது போக்கு பூங்காக்கள் மாதிரி, ஏ.வி.எம். ஸ்டுடியோவிலும் புதிதாக ஒரு அம்யூஸ்மென்ட் பார்க் உருவாகிறது. கார்விளையாட்டு உள்ளிட்ட பல சந்தோஷங்கள் இங்கு இருக்குமாம்.

சிவசக்தி பாண்டியனின் அறுபடை வீடு:

காதல் கோட்டை புகழ் சிவசக்தி பாண்டியன் தனது புதிய படமொன்றிற்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார். வெறும் தயாரிப்பாளராக மட்டுமே இருந்துவரும் பாண்டியனின் இப்படத்தில், கதாநாயகன் முரளி. நாயகி தேவயானி. படத்தின் பெயர் அறுபடை வீடு.

கட்சி தாவ நினைக்கும் ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன்

அதிமுக கட்சிக்கு ஆள் பிடிப்பவர் என்று செல்லமாக கட்சிக்காரர்களால் சொல்லப்படும் ராதாரவி மற்றும் எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் தேர்தலில்சீட் கிடைக்காததால், தேர்தல் முடிந்ததும், வெற்றி, தோல்வியைப் பொறுத்து கட்சி தாவ காத்திருக்கிறார்கள

Read more about: ajith, avm, movie, pictures, surya, vijayakanth
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil