»   »  தம்பியை மிரட்டுவதாக பாபிலோனா புகார்

தம்பியை மிரட்டுவதாக பாபிலோனா புகார்

Subscribe to Oneindia Tamil
Click here for more images

காவல் நிலையத்தில் கையெழுத்திடப் போகும்போது தனது தம்பியை போலீஸார் மிரட்டுவதாக காவல்துறை ஆணையரிடம் நடிகை பாபிலோனா புகார் கொடுத்துள்ளார்.

கவர்ச்சி நடிகை மாயாவின் தங்கை மகள் பாபிலோனா. திரைப்படங்களில் கவர்ச்சியை அள்ளி தெளித்து அனைவரையும் மயக்கிய பாபிலோனா, சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சரமாரியாக சிக்கி வந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் வடபழனியில் உள்ள ஒயின்ஷாப் முன்பு நடந்த தகராறில் போலீசாரின் பிடியில் விக்கி வசமாக சிக்கிவிட்டார்.

அப்போது தன்னை பிடித்த பெண் சப் இன்ஸ்பெக்டரை மார்பில் தாக்கி விட்டு விக்கி தப்பினார். பின்னர் விக்கியை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். பிறகு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

அதன்படி விக்கி தினந்தோறும் வடபழனி காவல் நிலையத்தில் சென்று கையெழுத்து போட வேண்டும். இந்த நிலையில் விக்கி கையெழுத்து போட செல்லும் போதெல்லாம் அங்குள்ள போலீசார் அவரை மிரட்டுவதாக அக்கா பாபிலோனாவிடம் கூறியுள்ளார் விக்கி.

இதையடுத்து தனது உறவினர்கள் சிலர் புடை சூழ பாபிலோனா, சென்னை நகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனிடம் புகார் கொடுப்பதற்காக உறவினர்கள் வந்தார்.

அங்கு அவர், நிபந்தனை ஜாமீனில் வெளியில் இருக்கும் தனது தம்பி கையெழுத்து போடுவதற்காக வடபழனி காவல்நிலையம் செல்லும் போதெல்லாம் அங்குள்ள போலீசார் அவரை மிரட்டுவதாக கமிஷ்னரிடம் பாபிலோனா விளக்கி கூறினார்.

அதைக் கேட்ட நாஞ்சில் குமரன், இது தொடர்பாக கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக பாபிலோனாவிடம் உறுதியளித்தார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil