»   »  பெண் எஸ்.ஐயை தாக்கிய பாபிலோனா தம்பி:அடிதடி வழக்கில் சித்திக்கு பிடிவாரண்ட்

பெண் எஸ்.ஐயை தாக்கிய பாபிலோனா தம்பி:அடிதடி வழக்கில் சித்திக்கு பிடிவாரண்ட்

Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் சித்தியும், முன்னாள் கவர்ச்சி நடிகையுமான மாயாவின் மகன் விக்கி, குடி போதையில் ரகளை செய்தபோது அவரைத் தடுக்க முயன்ற பெண் சப் இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டுத் தப்பினார். அவரைப் பிடிக்க போலீஸார் வலைவிரித்துள்ளனர்.

முன்னாள் குலுக்கல் நடிகை மாயா. இவர் வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகன் விக்கி.

இவர்கள் இருவரும் குடியிருப்பில் அடிக்கடி ரகளை செய்வதும், பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுடன் சண்டை போடுவதுமாக இருந்து வருகின்றனர். இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பெரும் தகராறு ஏற்பட்டு மாயாவும், விக்கியும் கைது செய்யப்பட்டனர்.

இதுெதாடர்பாக சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், விக்கி கே.கே.நகர் காமராஜர் சாலையில் உள்ள மதுக் கடை முன்பு குடிபோதையில், தனது நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்டார். அப்பகுதி வழியாக போவோர் வருவோரிடம் சண்டையிலும் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக ஜீப்பில் சப் இன்ஸ்பெக்டர் தெய்வநாயகி வந்தார். விக்கியும், அவரது நண்பர்களும் ரகளை செய்வதைப் பார்த்து அங்கு விரைந்தார்.

அப்போது விக்கியுடன், மகேஷ், ரகு ஆகியோரும் ரகளை செய்தது ெதரிய வந்தது. இதையடுத்து தெய்வநாயகியும், ஜீப் டிரைவரும் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் ரகு தப்பி விட்டார். விக்கியும், மகேஷும் மடக்கிப் பிடிக்கப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டனர்.

தப்பி ஓடிய ரகுவைப் பிடிக்க ஜீப் டிரைவர் பின்னாலேயே ஓடினார். இதைப் பயன்படுத்திக் கொண்டு தெய்வநாயகியின் மார்பில் தாக்கி விட்டு விக்கியும், மகேஷும் தப்பி ஓடினர்.

இதையடுத்து உயரதிகாரிகளுக்கு தெய்வநாயகி தகவல் கொடுத்தார். உதவி ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். தப்பி ஓடிய மகேஷைப் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். ஆனால் விக்கி சிக்கவில்லை.

இதையடுத்து மாயாவின் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அங்கு மாயாவும் இல்லை, விக்கியும் இல்லை. பின்னர் விக்கி தங்கியிருக்கும் நடிகை பாபிலோனாவின் வீட்டுக்குப் போலீஸார் சென்றனர். ஆனால் தனது தம்பி இங்கு இல்லை என்றும் செல்வாக்கு தெரியாமல் கைது செய்யும் வேலையில் ஈடுபட வேண்டாம் என்றும் மிரட்டலாக கூறியுள்ளார்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாத போலீஸார் விக்கி வந்ததும் உடனடியாக சரணடையுமாறு அறிவுறுத்துமாறு கூறி விட்டுச் சென்றனர்.

இதையடுத்து தனது பாட்டியுடன் (மாயாவின் அம்மா) பாபிலோனா முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வீட்டுக்குள் அவர்களை அனுமதிக்காத பாதுகாவலர்கள் அவர்களை அப்படியே திருப்பி அனுப்பி விட்டனர்.

விக்கியைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதற்கிடையே, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தகராறு செய்தது தொடர்பான வழக்கு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாயா ஆஜராகவில்லை.

இதையடுத்து விசாரணைக்கு தொடர்ந்து வராமல் இருக்கும் மாயாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி அருணாச்சலம் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாயா வீட்டுக்கு போலீஸார் சென்றனர். ஆனால் அங்கிருந்த உறவினர்கள் மாயா வெளிநாட்டுக்குப் போய் விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர் திரும்பியவுடன் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil