Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா“ .. இடையழகி சிம்ரனுக்கு இன்று பிறந்தநாள் .. குவியும் வாழ்த்து !
சென்னை : தமிழ் சினிமாவில் 90களில் இடையழகி என பெயர் எடுத்தவர் சிம்ரன். கையை தூக்கி இடையை குலுக்கி ஆட்டம் போட்டாலே போதும் அத்தனை இளசுகளும் க்ளோஸ்.
சிம்ரன் தன்னுடைய நடனத்தாளும், நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாமல் தன் அழகினாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களில் ஜோடி போட்டு நடித்துள்ள சிம்ரன் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உண்மையா தான் சொல்றீங்களா?...மனோபாலாவுக்கு ஜோடி அஜித் பட ஹீரோயினா ?

சிம்ரன் அறிமுகம்
மும்பையை பூர்வீகமாக கொண்ட சிம்ரன் 1976ம் ஆண்டு ஏப்ரல் 4ந் தேதி அசோக் நாவல் மற்றும் சாரதா நாவல் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். சிம்ரனின் உண்மையான பெயர் ரிஷிபால நாவல் சினிமாவுக்காக சிம்ரன் என்று மாற்றிக் கொண்டார். சிம்ரன் என்றால், தியானம் என்று அர்த்தமாம். நடிகை சிம்ரன், சிவாஜி, விஜய் நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

முன்னணி நடிகர்களுடன்
முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பூச்சூடவா, விஐபி, நேருக்குநேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் என்றாலும் சரி, கவர்ச்சி கதாபாத்திரங்கள் என்றாலும் சரி எல்லா கதாபாத்திரங்களிலும் மிரட்டுவார் சிம்ரன். அப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் சிம்ரன் தான்.

இடையழகி சிம்ரன்
செவ்வியல் நடனம் முதல் குத்தாட்டம் வரை அனைத்து வகையான நடனங்களிலும் பட்டையைக் கிளப்பி விடுவார் சிம்ரன். இவற்றுக்கிடையே இடுப்பை வளைத்தும் ஆடுதல், அரிய நடன அசைவுகளை அனாயாசமாகச் செய்துகாட்டுதல் ஆகியவை அவரது தனி ஸ்டைல். தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா, ஆல்தோட்ட பூபதி நானடா பாடல்கள் மூலம் அசாத்திய நடனத்தால் ரசிகர்களை சிம்ரன் கட்டிப்போட்டார்.

திருமணம்
சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போதே, தனது சிறு வயது நண்பரான தீபக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அதீப் ஓடோ, அதிதீ வீர் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சிம்ரன் அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.

இன்று பிறந்த நாள்
சமீபத்தில் ஓடிடியில் வெளியான மகான் திரைப்படத்தில் விக்ரமின் மனைவியாக சிம்ரன் நடித்திருந்தார். நடிகை சிம்ரனின் பிறந்த நாளான இன்று அவருக்கு இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் அமைய வேண்டும். ரசிகர்கள் மனதில் அவர் எப்போதும் நீங்கா இடம்பிடித்திருக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.