சினிமா சர்ச்சைகள் 2021: ஷில்பா ஷெட்டி கணவரின் ஆபாச பட வழக்கு முதல் ஷாருக்கான் மகன் கைது வரை!

மும்பை: பாலிவுட் பிரபலங்களை இந்த ஆண்டு நல்லாவே பந்தாடியது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு பக்கம் மரண செய்திகளால் சினிமா உலகம் துயரில் மூழ்கி கிடந்த நிலையில், மறுபக்கம் சினிமா பிரபலங்களின் சர்ச்சைகள் நாட்டையே உலுக்கி எடுத்தன.

கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கம் முடக்கம், ஆபாச பட வழக்கில் சிக்கிய ஷில்பா ஷெட்டியின் கணவர், போதை பொருள் விவகாரத்தில் மாட்டி தவித்த ஷாருக்கான் மகன், புத்தக டைட்டில் சர்ச்சையில் சிக்கிய கரீனா கபூர் வரை ஏகப்பட்ட விஷயங்களை இங்கே பார்ப்போம்.

ஆபாச பட வழக்கு

ஆபாச பட வழக்கு

இந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை அனுமதியின்றி தயாரித்த வழக்கில் ஏகப்பட்ட புகார்கள் குவிந்த நிலையில், அவரை போலீசார் பொறி வைத்து பிடித்தது நாட்டையே உலுக்கிய செய்தியாக மாறியது. முதலில் கணவருக்காக வாதாடிய நடிகை ஷில்பா ஷெட்டி பின்னர் அது பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என பின் வாங்கியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கங்கனாவை நீக்கிய ட்விட்டர்

கங்கனாவை நீக்கிய ட்விட்டர்

இந்த ஆண்டு மே மாதம் தொடர்ந்து பரபரப்பை கிளப்பக் கூடிய சர்ச்சை ட்வீட்களை போட்டு பிரச்சனைகளை உருவாக்கி வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிரடியாக நீக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ட்விட்டர் இல்லையென்றால் என்ன இன்ஸ்டாகிராம் இருக்கிறதே என அங்கே போயும் நாக சைதன்யா - சமந்தா விவகாரத்துக்கு அமீர் கான் தான் காரணம் என போஸ்ட் போட்டு சர்ச்சையை கூட்டினார்.

அனுராக், டாப்ஸி வீட்டில் ரெய்டு

அனுராக், டாப்ஸி வீட்டில் ரெய்டு

இந்த ஆண்டு மார்ச் மாதம் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி வீட்டில் அதிரடியாக வருமான வரித்துறையினரின் சோதனை நடந்தது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியது. 3 நாட்கள் நடந்த தொடர் ரெய்டின் முடிவில் நடிகை டாப்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 3 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனையில் பாரிஸில் நான் கட்டாத வீட்டின் சாவி, வாங்காத 5 கோடிக்கான செக் உள்ளிட்டவற்றை க்ண்டு பிடித்து சென்றனர் என கலாய்த்து இருந்தார்.

கரீனா கபூரும் சர்ச்சைகளும்

கரீனா கபூரும் சர்ச்சைகளும்

பாலிவுட் நடிகை கரீனா கபூரின் இரண்டாவது மகனுக்கு ஜஹாங்கீர் என வைக்கப்பட்ட பெயர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், பேறு கால நிகழ்வுகள் குறித்து அவர் எழுதிய புத்தகத்திற்கு Pregnancy Bible என வைக்கப்பட்ட டைட்டிலும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. லாஸ்ட் பட் நாட் லீஸ்டாக இஸ்லாமிய மதத்திற்கு மாறிய கரீனா கபூர் சீதையாக நடிக்க கூடாது என பெரும் சர்ச்சை கிளம்பியது. கடைசியாக அந்த படம் கங்கனா ரனாவத் வசம் வந்தது.

200 கோடி ஊழலில் சிக்கிய ஜாக்குலின்

200 கோடி ஊழலில் சிக்கிய ஜாக்குலின்

பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் கான்மேன் சுகேஷ் உடன் இணைந்து 200 கோடி ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் துபாய்க்கு செல்ல முயன்ற அவரை மும்பை போலீசார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதே போல இன்னும் பல சர்ச்சைகளில் இந்த ஆண்டு சினிமா பிரபலங்கள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X