»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஏ.ஆர். ரஹ்மானின் "பாம்பே ட்ரீம்ஸ்" கேசட் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கேசட்வெளியீட்டாளர்கள் சோகத்தில் உள்ளனராம்.

பெரும் ஆரவாரத்துடனும், எதிர்பார்ப்புடனும் லண்டனில் வெளியான இந்த ஆல்பத்தின் ஆடியோ மற்றும்வீடியோ வடிவங்கள் இந்தியாவில் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

ஆனால் விற்பனை மிகவும் மந்தமாக இருக்கிறதாம். குறிப்பாக ஆடியோ விற்பனை படு டல்லாக உள்ளதாம்.இதற்கு பல காரணங்களைக் கூறுகிறார்கள்.

ஏற்கனவே படங்களில் வெளியான சில ட்யூன்களை ரஹ்மான் "பாம்பே ட்ரீம்ஸ்"ஸில் பீட் செய்திருப்பதுஆடியன்ஸைக் கவரவில்லை. மேலும், இந்திய மூடுக்கு ஏற்ற ட்யூன்களும் இதில் இல்லை.

மேலும் ரஹ்மானின் பழைய கவர்ச்சியும் ட்யூன்களில் இல்லை என்று ரசிகர்கள் கூறுகிறார்களாம்.

இந்தியாவில், குறிப்பாக சென்னையில் அதிக அளவில் "பாம்பே ட்ரீம்ஸ்" விற்பனையாகும் என்று எதிர்பார்த்தகேசட் விற்பனையாளர்கள் இப்போது சோகத்தில் மூழ்கியுள்ளார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil