»   »  ஒரு நாளில் ரூ. 1.7 கோடி.. சிவாஜி சாதனை

ஒரு நாளில் ரூ. 1.7 கோடி.. சிவாஜி சாதனை

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்துக்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கிவிட்டது. சென்னையில் டிக்கெட் விற்பனையில் மாபெரும் சாதனையும் நிகழ்த்தப்பட்டுவிட்டது.

சென்னையில் மொத்தம் 17 தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகிறது. இன்று நடந்த முன் பதிவில் இந்த 17 தியேட்டர்களிலும் ரூ. 1.70 கோடிக்கு டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாம்.

இதற்கிடையே சிவாஜி பட ரிலீஸையொட்டி சொந்த ஊரான பெங்களூரில் ரஜினி குறித்த புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது.

கர்நாடகத்திலிருந்து வெளியாகும் பிரபல நாளிதழான விஜய் கர்நாடகா சார்பில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஆசிரியர் மகேஷ் தேவிஷெட்டி நூலை எழுதியுள்ளார்.

ரஜினியின் சிறு வயது சம்பவங்கள் முதல் லேட்டஸ்ட் நிகழ்ச்சி வரை இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினியின் நெருங்கிய நண்பர்களான கர்நாடகத்தைச் சேர்ந்த ராஜ் பகதூர், ரகுநந்தன், துவாரகீஷ் ஆகியோரின் பேட்டிகளும் இதில் உள்ளன.

ரஜினிக்கும் தனக்கும் தனிப்பட்ட முறையில் உள்ள நட்பு, ரஜினியின் குணாதிசியங்கள் உள்ளிட்டவற்றை மகேஷ் நூலில் விவரித்துள்ளார்.

மொத்தம் 132 பக்கங்களைக் கொண்டதாக இந்த நூல் உள்ளது. பெங்களூர் தியேட்டர்களில் ரஜினி எப்படி படம் பார்க்க வருவார், அப்போது அவர் செய்யும் குறும்புகள், மாறு வேடத்தில் நண்பர்களுடன் பெங்களூர் நகரைச் சுற்றி வருவது உள்ளிட்டவை சுவாரஸ்யமாக விளக்கப்பட்டுள்ளன.

இந்த நூல் கன்னடம் தவிர தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாம்.

சிவாஜி காய்ச்சல் படு வேகமாக பரவிக் கொண்டுள்ள நிலையில் அதை பயன்படுத்தி இந்த நூலை உலா விட்டுள்ளார் மகேஷ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil