»   »  கோலிவுட் 'பாக்ஸ் ஆபிஸ்':br/தொடர்ந்து முதலிடத்தில் சிவாஜி!

கோலிவுட் 'பாக்ஸ் ஆபிஸ்':br/தொடர்ந்து முதலிடத்தில் சிவாஜி!

Posted By:
Subscribe to Oneindia Tamil


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் மாதவனின் ஆர்யாவும், 3வது இடத்தில் பார்த்திபன்-பாரதியின் அம்முவாகிய நான் படமும் உள்ளன.

85வது நாளை முடித்துள்ள சிவாஜி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னை நகரில் 10 தியேட்டர்களிலும், புறநகர்களில் 16 தியேட்டர்களிலும் சிவாஜி ஓடிக் கொண்டுள்ளது.

வார இறுதி நாட்களில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலான இருக்கைகள் நிரம்பி விடுகின்றன. வார நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட சீட்கள் நிரம்புகிறதாம்.

பல வகையிலும் பல்வேறு சாதனகளைப் படைத்துள்ள சிவாஜி, விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்துள்ளது. போட்ட பணத்தை விட 2 மடங்கு அதிக பணத்தை வசூலித்துத் தந்துள்ளது.

சென்னை நகரில் இப்படத்தை விநியோகிக்கக் கொடுக்கப்பட்ட தொகை ரூ. 6.7 கோடிதான். ஆனால் இதுவரை கிடைத்துள்ள வசூல் ரூ. 13 கோடியாம்.

தற்போதைய நிலவரப்படி முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள தமிழ்ப் படங்களின் பட்டியல்:

1. சிவாஜி - தி பாஸ்:

பாய்ஸ் தோல்வி, சராசரி அந்நியன் ஆகிய படங்களுக்குப் பிறகு ஷங்கருக்கு புது வாழ்க்கை கொடுத்த படம் சிவாஜி. ரஜினிக்கு இன்னும் ஒரு சிறப்புப் படம்.

2. ஆர்யா:

பாலசேகரன் இயக்கத்தில் வெளியான இப்படம் திரையிட்ட இடம் எல்லாம் நல்ல ஓட்டமும், வசூலுமாக கலக்கிக் கொண்டிருக்கிறது. முதலில் 2வது இடத்தில் இருந்த கிரீடத்தை ஆர்யா பின்னுக்குத் தள்ளி விட்டது. மாதவன், பிரகாஷ் ராஜின் சிறப்பான நடிப்பு, வடிவேலின் காமெடி, பாவனாவின் வித்தியாச நடிப்பு ஆகியவை இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

3. அம்முவாகிய நான்:

கதையின் முக்கிய அம்சம் விபச்சாரம் என்ற போதிலும் கூட அதை அழகாக, ஆபாசம் கலக்காமல் கொடுத்த விதம், புதுமுகம் பாரதியின் இயல்பான நடிப்பு, பார்த்திபனின் அடக்கமான நடிப்பு, சிறந்த பாடல்கள், பத்மா மகனின் நேர்த்தியான இயக்கம் என பல வெற்றிக் காரணங்கள் இந்தப் படத்தை ஹிட் ஆக்கியுள்ளன.

4. வீராப்பு:

பி மற்றும் சி சென்டர்களில் இப்படம் பெரும் ஹிட் ஆகியுள்ளது. சென்னை போன்ற மாநகரங்களிலும் கூட கணிசமான வசூலை கண்டு வருகிறது. மாஸ் ஹீரோ கதைகளை இயக்கக் கூடிய தகுதி புதுமுக தகுதியை இயக்குநர் பத்ரிக்கு இப்படம் கொடுத்துள்ளது.

5. கிரீடம்:

ஆரம்பத்தில் சரியாக போகாத கிரீடம், கிளைமேக்ஸ் காட்சியை மாற்றிய பின்னர் ஓடத் தொடங்கியது. ஏ சென்டர்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் ரசிகர்களைக் கொண்டு ஓடி வருகிறது. ஆனால் கிராமப்புற ரசிகர்களைக் கவரத் தவறி விட்டது.

Read more about: shivaji

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil