»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாய்ஸ் தோல்வி கோலிவுட்டை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

"பாய்ஸ்" படத்திற்குக் கிடைத்துள்ள கடுமையான வரவேற்பால் ஷங்கர் பெரும் அதிர்ச்சியில்ஆழ்ந்துள்ளார். அத்தோடு திரையுலகிலும் இந்தப் படத்திற்கு பெரும் அதிருப்தி கிளம்பியுள்ளது.

ரூ. 24 கோடி என்ற பட்ஜெட்டில் 2 வருடங்களுக்கு முன்பே பூஜை போடப்பட்டது பாய்ஸ். இந்தியன்படத்திற்குப் பிறகு ஷங்கரும், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும் சேரும் படம் என்பதால் பெரும்எதிர்பார்ப்பு கிளம்பியது.

ஆனால் பாய்ஸ் தொடங்கிய சில நாட்களிலேயே துள்ளுவதோ இளமை என்று தனுஷ், ஷெரீன்நடிப்பில் படம் வந்தது. இந்தப் படத்தைப் பார்த்த ஷங்கர் அதிர்ச்சியடைந்தார். கிட்டத்தட்ட அவர்எடுத்துக் கொண்டிருந்த பாய்ஸ் படத்தின் கதையை ஒட்டி துள்ளுவதோ இளமை இருந்ததால்வெறுத்துப் போன அவர் அதுவரை எடுத்திருந்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டு விட்டுகதையை மாற்றி மீண்டும் எடுக்க ஆரம்பித்தார்.

இதனால் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதிர்ச்சியடைந்தார். எடுத்த படத்தை அப்படியே தூரப்போட்டு விட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது அவருக்கு. இருப்பினும் ஷங்கர் என்பதால்அமைதியாகப் போய் விட்டார். இப்படியாக எடுக்கப்பட்ட பாய்ஸ் படம் ஒரு வழியாக சமீபத்தில்வெளியானது.

அதற்கு முதல் நாள் சென்னை தேவி தியேட்டரில் முக்கியப் பிரபலங்களுக்கான பிரீமியர் ஷோவுக்குஏற்பாடு செய்திருந்தார் ஷங்கர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள்கள் செளந்தர்யா, ஐஸ்வர்யாஆகியோரோடு வந்திருந்தார்.

இவர்கள் தவிர பாய்ஸ் படத்தின் வசனத்தை எழுதிய எழுத்தாளர் சுஜாதா, அவரது மனைவியோடும்,நடிகர் சிவக்குமார் அவரது மனைவியோடும், மேலும் பல சினிமா பிரபலங்களும் படத்திற்குவந்திருந்தனர். பத்திரிக்கையாளர்களும் படத்திற்கு வந்திருந்தனர்.

படம் ஓட ஓட ரஜினி உள்ளிட்ட அனைவரின் முகங்களிலும் அதிர்ச்சி தெரிய ஆரம்பித்தது. காரணம்நெளிய வைக்கும் வசனங்களும், இரட்டை அர்த்தம் என்றில்லாமல் நேரடியாக ஆபாசமாக பேசும்கேரக்டர்களையும் பார்த்தவர்கள் நெளிய ஆரம்பித்தனர். ரஜினியின் மகள்கள் இருவரும் சட்டென்றுஅங்கிருந்து கிளம்பி விட்டனர். அதேபோல சிவக்குமாரும், மனைவியுடன் கிளம்பி விட்டார்.

போகும்போது இப்படி ஒரு படத்தை இதுவரை நான் தமிழில் பார்த்ததே இல்லை என்றுவேதனையுடன் சிவக்குமார் கூறியதாக தெரிகிறது.

எல்லோரும் கிளம்பிக் கொண்டிருக்கு, படத்திற்கு வசனம் எழுதிய சுஜாதாவின் மனைவியும்கிளம்பிச் சென்றதுதான் ஹைலைட் காட்சி. படத்தில் இந்த அளவுக்கு ஆபாச காட்சிகளும்,வசனங்களும் இடம் பெற்றதை எப்படி சென்சார் போர்டு கண்டுகொள்ளாமல் விட்டது என்றுஎல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

ஆனால் இந்தப் படத்தை தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்துள்ள ஷங்கர், படத்திற்கான சென்சார்சான்றிதழை தெலுங்கு படத்திற்குத்தான் பெற்றுள்ளாராம். தமிழில் டப்பிங் படம் போலத்தான் ரிலீஸ்செய்துள்ளனராம். தமிழில் சென்சாருக்குப் போனால் படத்தை சுத்தமாக வெட்டி எடுத்துவிடுவார்கள் என்பதால் இந்த தந்திரமாம்.

அதேபோல, படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் கூட சரியில்லாமல் போனதும் படம் அவுட்ஆகிப் போனதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், வைரமுத்துவுக்கும்மோதல் ஏற்பட்டதால், வைரமுத்து பாட்டு எழுதவில்லை.

படத்தின் ஆபாச காட்சிகளைப் பார்த்து பின்னணி இசை கோர்க்க ரஹ்மான் மறுத்த விட்டதால்,அவரது உதவியாளர் பிரவீண் மணிதான் பின்னணி இசையமைத்துள்ளார். இதனால் ஒன்றுக்கொன்றுஒட்டாமல் போய் படம் குப்பையாகி விட்டது.

மிகவும் அதிக அளவில் பேசப்பட்டு, கடைசியில் நாய்ஸ் அடங்கிப் போய் பாஸ்ஸ் படம் படுதோல்வியைச் சந்தித்திருப்பது நல்ல சினிமாவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழ் ரசிகர்களுக்குபெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. எதைக் கொடுத்தாலும்-அது ஷங்கர் போன்ற பெரியடைரக்டர்களே ஆனாலும் கூட- தூக்கி எறிய தயங்க மாட்டோம் என்பதையே தமிழ் ரசிகர்கள்கோலிவுட்காரர்களுக்கு பாய்ஸ் மூலம் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பாபாவுக்குப் பிறகு மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ள மிகப் பெரிய படம் பாய்ஸ்.

குட்லக் நெக்ஸ்ட் டைம், மிஸ்டர் ஷங்கர் !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil