»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பாய்ஸ் படத்தில் வரும் ஆபாச காட்சிகள், வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அந்தக்காட்சிகளையும், வசனங்களையும் நீக்கி விட இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பாய்ஸ் படம் வரலாறு காணாத அளவுக்குஆபாச காட்சிகளையும், வசனங்களையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளதாக கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளது.

பெண்களை மிகவும் வக்கிரமாகவும், இளைஞர்கள், மாணவர்கள் என்றாலே செக்ஸ் வெறிபிடித்தவர்கள் போலவும் இந்தப் படம் சித்தரித்துள்ளதாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்தப்படத்தில் இடம் பெறும் வசனங்கள் மிகுந்த முகச் சுளிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

எதிர்பாராத இந்த எதிர்ப்புக் கனைகளினால் கலங்கிப் போன இயக்குநர் ஷங்கர், ஆபாச காட்சிகள்,வசனங்களை நீக்கி விட முடிவு செய்தார். ஏற்கனவே இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவுகளால்நொந்து போயுள்ள தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும் வேறு வழியில்லாமல் இதற்கு ஒத்துக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் திரையிடப்பட்டுள்ள படங்களிலிருந்து ஆபாச காட்சிகள்,வசனங்கள் நீக்கப்பட்டு விடடன. தமிழகம் முழுவதும் 100க்கணக்கான தியேட்டர்களில் ஓடிக்கொண்டுள்ள படத்திலும் இன்னும் ஓரிரு தினங்களில் ஆபாச காட்சிகள், வசனங்கள்நீக்கப்படவுள்ளன.

ஆனால் ஆபாச காட்சிகளையும், வசனங்களையும் நீக்கி விட்டால் இந்தப் படத்தில் எந்தக்காட்சியுமே புரியாதே என்று தமிழ்த் திரையுலகினர் கூறுகின்றனர்.காரணம், ஆபாசமாக பேசும்வசனங்களில் மட்டும்தான் கொஞ்சமாவது தமிழ் இருப்பதாக அவர்கள் நக்கலாக கூறுகின்றனர்.அந்த அளவுக்கு ஆங்கிலமும், புரியாத வார்த்தைகளும் இந்தப் படத்தின் வசனங்களிலும்,பாடல்களிலும் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

எப்படியோ, ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ் என நல்ல படங்கள் பலவற்றைத் தந்த ஷங்கருக்குஇந்தப் படம் பெரும் களங்கமாக அமைந்து விட்டது என்னவோ உண்மை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil