»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஷங்கருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பாய்ஸ் படம் மாணவர்களின் மரியாதை, ஒழுக்கம், மன நிலையைக் குலைக்கும் விதமாக இருப்பதாக வந்தபுகார்களையடுத்து, படத்தின் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், சென்சார் போர்ட், மத்திய அரசின்தகவல் ஒளிபரப்புத் துறை ஆகியோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியொன்றில், பாய்ஸ் படத்தில், ஆபாசகாட்சிகள், வசனங்கள் இடம் பெற்று இருப்பதற்கு, நிகழ்ச்சியில் பேசிய சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,கல்லூரி முதல்வர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி சம்பந்தத்திடம் புகார்மனுக்களையும் கொடுத்தனர்.

இந்தப் புகார்களை பரிசீலித்த நீதிபதி சம்பந்தம், ஷங்கர், ஏ.எம்.ரத்னம் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.

இது குறித்து சம்பந்தம் நிருபர்களிடம் கூறுகையில், பாய்ஸ் படம் சென்னையில் தணிக்கை செய்யப்படவில்லை.ஹைதராபாத்தில் தணிக்கை செய்துள்ளனர். இந்தப் படம் மாணவர்களின் ஒழுக்கம், நெறிமுறைகள், மன நிலையைமட்டும் பாதிக்கவில்லை,

ஒட்டுமொத்தமாக பெண்களை தரக்குறைவாக சித்தரித்துள்ளதாக கருத்து நிலவுகிறது. எனவே தான் விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றார்.

இதற்கிடையே, இந்தப் படத்தை மீண்டும் சென்சார் செய்ய வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது.

ஷங்கரின் ஓவர் திறமை:

இந்தப் படத்தை ஷங்கர் அண்ட் கம்பெனி, திட்டமிட்டே தான் ஹைதராபாத் சென்சார் போர்ட் அலுவலகத்தில்வைத்து தணிக்கை செய்ததாகத் தெரிகிறது.

சென்னையில் தணிக்கை செய்தால் இரட்டை அர்த்த வசனங்களுக்கு கத்திரி விழும் என்பதால், அதைத் தவிர்க்கவேவேறு வசனங்கள் கொண்ட தெலுக்குப் பதிப்புக்கு மட்டும் தணிக்கை சான்றிதழை வாங்கிக் கொண்டு, அதே படம்தான் என்ற போர்வையில் தமிழ் பதிப்புக்கு தணிக்கை சான்றிதழே வாங்காமல் ரிலீஸ் செய்துள்ளனர்.

  • Bad பாய்ஸ்
  • அடுத்த படத்திற்கு ஷங்கர் ரெடி!
  • பாய்ஸை எதிர்த்து தியேட்டர் முன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
  • பாய்ஸ் மீண்டும் சென்சார் செய்யப்படுமா?
  • பாய்ஸ் ஆபாச காட்சிகளுக்கு கத்திரி போடுகிறார் ஷங்கர்
  • "நாய்ஸ்" அடங்கிய "பாய்ஸ்"
  • மகள்களுடன் "பாய்ஸ்" பார்க்கவில்லை: ரஜினி
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil