»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கரின் பாய்ஸ் படம் ரெடியாகி விட்டது.கடைசிக் கட்ட நகாசு வேலைகள்தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தப் படத்திற்கான பட்ஜெட் ரூ. 20 கோடியைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.

படம் ஏகப்பட்ட இழுவைக்கப் பிறகு தான் முடிக்கப்பட்டது. இதனால் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் பாக்கெட்டில் பெரியஓட்டை விழுந்துள்ளது.

ஆங்காங்க கடனை வாங்கி படத்தை முடித்துவிட்டு, லட்சக்கணக்கில் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், படம் மிக நன்றாக வந்துள்ளதால் சூப்பர்-டூப்பர் ஹிட் ஆகும் என்கின்றனர் கோடம்பாக்கத்தில். இதனால்ஷங்கருக்கு இணையாக ரத்னமும் தெம்பாகவே இருக்கிறார்.

இவ்வளவு செலவு செய்து எடுத்து விட்டு திருட்டு விசிடிக்காரர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி விடக்கூடாது என்பதற்காக படத்தை "காபி கன்ட்ரோல் டிஜிட்டல் சிஸ்டம்" முறையில் "டெவலப்" செய்ய உள்ளார்களாம்.

இதன் மூலம் சாதாரண முறையில் படத்தை "காப்பி" எடுக்க முடியாதாம். திருட்டு விசிடிக்காரர்களுக்குதியேட்டர்களிலிருந்து விசிடியில் பதிவு செய்வது ஆகாத காரியமாம்.

ஆனால், டிவிடியைக் கொண்டு படத்தை "சுட" முடியுமாம். இந்தியாவில் டிவிடி அந்த அளவுக்கு ஊடுருவவில்லைஎன்பதால் படத்தை காப்பாற்றிவிட முடியும் என்று நம்புகிறார் ஷங்கர்.

ஆனால், திருட்டு விசிடிக்காரர்கள்தான், சந்தில் சிந்து பாடும் சாமர்த்தியசாலிகள் ஆயிற்றே, நிச்சயமாக ஏதாவதுஐடியா வைத்திருப்பார்கள். பொருத்திருந்து பார்ப்போம் !

வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு மொழிகள் பேசும் குடும்பங்களைச் சேர்ந்த வாலிபர்கள், அவர்களிடையேஒரு பெண்ணால் ஏற்படும் காதல் மோதல்கள், பின்னர் ஏற்படும் நட்பு, இறுதியில் இந்தக் கூட்டணிப் படைவாழ்வில் செய்து காட்டும் இசை சாதனைகள் தான் கதையாம்.

ரகுமான் ரொம்ப நாள் எடுத்துக் கொண்டாலும் பாடல்களில் புகுந்து விளையாடியுள்ளார்.

மணிகண்டன், சாய், நகுல், பரத், சித்தார்த், இவர்களோடு விவேக் மற்றும் ஹீரோயின் ஹரிணி என புதுமுகஇளமைப் பட்டாளம் கலக்கியிருக்கிறதாம்.

ஷங்கருக்கே உள்ள டிஜிட்டல் கிராபிக்ஸ் மிரட்டல்களும் உண்டாம். படத்தில் ஒரு பாடலுக்காக கிராபிக்ஸ் பெண்மாடலை உருவாக்கி ஆட விட்டிருக்கிறார்கள். இதுவரை இந்திய சினிமாவைச் சேர்ந்த யாரும் கால் பதிக்காதடாஸ்மேனியாவில் ஒரு பாடல் காட்சியை அற்புதமாக பிடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு பாடலுக்கு 500 பேரை ஆடவிட்டும், இன்னொரு பாடல் காட்சியை 62 கேமராக்கள் வைத்தும்படமெடுத்திருக்கிறார்கள். ரவி கே. சந்திரனின் கேமரா குழு வியர்வைச் சிந்தியிருக்கிறது.

கிளைமாக்ஸ் பாடல்காட்சிக்காக நிஜமாகவே ராக் காண்சர்ட் நடத்தியிருக்கிறார்கள். இதில் பங்கேற்றது 3,000 துணை நடிகர்களாம்.இந்தப் பாடலுக்கு மிகப் பிரம்மாண்டமான அரங்கை நிர்மாணித்தது சாபு சிரில் அண்ட் படை.

இப்போ தெரியுதா ஏன் ஏ.எம். ரத்னம் பாக்கெட் ஏன் ஓட்டையானது என்று.. இப்போ தெரியுதா ஷங்கர் ஏன்காப்பி கன்ட்ரோல் சிஸ்டத்தில் இறங்கி படத்தை காக்க இந்தப் பாடுபடுகிறார் என்று.

படம் மிக பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதால், இந்த படத்துடன் சேர்ந்து ரிலீசாகத் திட்டமிடப்பட்டபடங்களின் தேதியைத் தள்ளிப் போட்டுவிட்டார்களாம் பல தயாரிப்பாளர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil