»   »  பிரிட்னி தற்கொலைக்கு முயற்சி?

பிரிட்னி தற்கொலைக்கு முயற்சி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Britney Spears

லாஸ் ஏஞ்ஜலஸ்: பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாப் பாடல்களுக்கு மட்டுமல்லாமல் பரபரப்புக்கும் பெயர் போனவர் பிரிட்னி. இவருக்கும், கெவின் பெடர்லினுக்கும் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இந்த நிைலயில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் பிரிட்னி - பெடர்லின் ஆகியோரின் 2ஆண் குழந்தைகளும், பிரிட்னி வசம் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பிரிட்னி ஸ்பியர்ஸ் வீட்டுக்கு திடீரென போலீஸாரும், ஆம்புலன்ஸும் விரைந்து வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டிலிருந்து பிரிட்னியை செடார்ஸ் சினாய் மருத்துவமனைக்குக் கொண்டு போலீஸார் கொண்டு சென்றனர். அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்னியை 72 மணி நேர கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவரது இரு குழந்தைகளான சீன் பிரெட்சன், ஜெய்டன் ஜேம்ஸ் ஆகியோரை பெடர்லின் வீட்டுக்குக் கொண்டு செல்ல அவரது பாதுகாப்பாளர் முயற்சித்தார். ஆனால் பிரிட்னி குழந்தைகளை ஒப்படைக்க மறுத்தார். இதனால் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பிரிட்னி வீட்டில் பெரும் குழப்பம் நிலவியது.

பிரிட்னி தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அடையாளம் தெரியாத ஒரு பொருளை சாப்பிட்டுள்ளதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜேசன் லீ கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரிட்னியின் இரு குழந்தைகளும் அவர்களது தந்தையுடன் இருக்க வேண்டும் என லாஸ் ஏஞ்சலஸ் உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை இரு குழந்ைதகளும் பெடர்லினுடன் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 14ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம்தான் குழந்ைதகள் யாருடன் வளர வேண்டும் என்பது உறுதியாகத் ெதரிய வரும்.

பிரிட்னியின் பாப் வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் பெரும் பரபரப்பான நிகழ்வுகளைக் கொண்டது.

அரை குறை உடையுடன் அவர் தோன்றுவது போன்ற வீடியோக்களும், புகைப்படங்களும் அடிக்கடி பத்திரிக்ைகளில் வெளியாகி வந்தன. மேலும் திடீரென ஒரு முறை மொட்டைத் தலையுடன் அவர் காட்சி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மொட்டைத் தலையுடன் தான் இருப்பதை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் ஒருவரின் காரை தனது குடையால் அடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

1998ல் நட்சத்திர அந்தஸ்தை எட்டினார் ஸ்பியர்ஸ். அவரது முதல் பாப் ஆல்பமான பேபி ஒன் மோர் டைம் பெரும் புகழ் பெற்ற இசைத் தொகுப்பாகும். அதன் பின்னர் ஊப்ஸ், ஐ டிட் இட் அகெய்ன் என்ற ஆல்பமும் பெரும் பிரபலமானது.

அமெரிக்க இசையுலக வரலாற்றில் அதிக அளவில் இசை ஆல்பம் விற்ற 8வது பெண் பாடகி பிரிட்னி என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil