»   »  தொடங்கியது கேன்ஸ் திரை விழா

தொடங்கியது கேன்ஸ் திரை விழா

Subscribe to Oneindia Tamil

ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகெங்கும் உள்ள திரையுலகினரால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 60வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் தொடங்கியது.

உலக அளவில் திரையுலகினரிடையே பிரபலமானது ஆஸ்கர் விருதுகள். அதற்கு அடுத்து கேன்ஸ் விருதுகள்தான் பிரபலமானது. இந்த ஆண்டு கேன்ஸ் விழாவுக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. அதாவது இந்த ஆண்டு விழா கேன்ஸ் விழாவுக்கு மணி விழாவாகும். அதாவது 60வது ஆண்டாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான படங்கள் திரையிடப்படவுள்ளன. முதல் படமாக நோரா ஜோன்ஸ் நடித்த மை ப்ளூபெரி நைட்ஸ் என்ற படம் திரையிடப்பட்டது.

திரைப்பட விழாவில் இந்திய நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷரோன் ஸ்டோன், ஜார்ஜ் குளூனி, பிராட் பிட், அல் பசினேனா, ஏஞ்ஜெலினா ஜூலி, லியானார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து வெயில் உள்ளிட்ட பல படங்கள் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளன.

1939ம் ஆண்டு வெனீஸ் திரைப்பட விழாவுக்குப் போட்டியாக கேன்ஸ் விழா தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் உலகப் போர் வந்து விட்டதால் 1950 வரை கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil