»   »  கேன்ஸ் விழா: இந்தியப் படங்களுக்கு விருதில்லை

கேன்ஸ் விழா: இந்தியப் படங்களுக்கு விருதில்லை

Subscribe to Oneindia Tamil

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியப் படங்களுக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. சிறந்த படமாக ருமேனியா நாட்டுப் படம் தேர்வானது.

ஆஸ்கர் விருதுக்கு இணையானதாக கருதப்படும் கேன்ஸ் திரைவிழா, பிரான்ஸின் கேன்ஸ் நகரில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

12 நாட்கள் நடந்த விழாவின் இறுதி நாளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ருமேனியாவின் 4 லூனி, 3 சப்தமினி சி, 2 ஜைல் (4 மாதம், 3 வாரம், 2 நாள்) என்ற படத்திற்கு சிறந்த படத்திற்கான தங்கப் பனை விருது வழங்கப்பட்டது.

படத்தின் இயக்குநர் கிறிஸ்டியன் முங்கியூவிடம் விருதினை நடிகை ஜேன் பேண்டா வழங்கினார்.

சிறந்த நடிகைக்கான விருது (படம்-சீக்ரெட் சன்ஷைன்) தென் கொரியாவின் ஸியோன் தோயின்னுக்குக் கிடைத்தது. ரஷ்ய நடிகர் கான்ஸ்டான்டைன் லாவ்ரொனெங்காவுக்கு சிறந்த நடிகருக்கான (படம்-தி பனிஷ்மென்ட்) விருது கிடைத்தது.

அமெரிக்காவின் ஜூலியன் சினாபெல் சிறந்த இயக்குநருக்கான விருதினை வென்றார்.

இந்த விழாவில் வெயில் உள்பட 7 இந்தியப் படங்கள் பங்கேற்றன. ஆனால் இந்தியப் படங்களுக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil