»   »  குஷ்பு வழக்கு ஒத்திவைப்பு

குஷ்பு வழக்கு ஒத்திவைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kushboo

இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாக கூறி நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் வருகிற 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த வல்லமை தாராயோ படத் தொடக்க விழாவின்போது, சாமி சிலைகளுக்கு அருகே செருப்புக் காலுடன் கால் மேல் கால் போட்டவாறு அமர்ந்திருந்ததால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார் குஷ்பு.

குஷ்புவுக்கு எதிராக கும்பகோணம், ராமேஸ்வரம் ஆகிய ஊர் நீதிமன்றங்களில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் குருமூர்த்தி தொடர்ந்துள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு:

சாமி சிலைகளை அவமதித்ததாக கூறி நடிகை குஷ்பு மீது புதுக்கோட்டை நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வல்லமை தாராயோ பட விழாவில் குஷ்பு சாமி சிலைகளை அவமதித்ததாக புதுக்கோட்டை மாவட்ட அத்வானி பேரவை சார்பில் அதன் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பத்மநாபன் விசாரணையை அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil