»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஆங்கிலப் படமொன்றில் நடிக்க மாதவன், காவேரி ஒப்பந்தமாகியுள்ளார்கள்

டான்ஸ் ஆடத் தெரியாது, ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகளில் நடிக்கத் தெரியாது. ஆனாலும் தனது வசீகரமான புன்சிரிப்பாலும்,எந்தக் கேரக்டரையும் இயல்பாகக் கையாளும் திறமையாலும் மாதவன் தொடர்ந்து பட வாய்ப்புகளைத் தக்க வைத்துக்கொள்கிறார்.

மணிரத்னத்திடம் தொடர்ச்சியாக மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்தவர் இவர் ஒருவர்தான். மூன்றாவது படமான ஆய்தஎழுத்து படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன.

சதாவுடன் நடித்த எதிரி படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது. இந் நிலையில் மாதவன் ஒரு ஆங்கிலப் படத்தில்நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

அமெரிக்காவில் செட்டிலான இந்தியரான ராஜீவ் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு லவ் இன் லாஸ்ஏஞ்ஜெல்ஸ் என்று பெயரிட்டுள்ளார்கள்.

படத்தில் மாதவனுடன் ஜோடி சேருபவர் காவேரி. மலையாளக் கரையோரமிருந்து காசி படத்தின் மூலம் தமிழகத்துக்கு வந்தார்காவேரி. இதர மலையாள நடிகைகளைப் போலவே இவருக்கும் ஓரிரு படங்களுக்கு மேல் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இதனால் மனம் நொந்தவர் பெயரை கல்யாணி என்று மாற்றிக் கொண்டு தெலுங்கு பக்கம் போனார். பெயர் மாற்றிய ராசியோஎன்னவோ தெலுங்கில் குறிப்பிடும்படி சில வாய்ப்புகள் வந்து பிஸியானார். ஜாக்பாட் அடித்ததுபோல் இப்போது மாதவனுக்குஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வெகு விரைவில் படப்பிடிப்புக்காக மாதவனும், காவேரியும் அமெரிக்கா கிளம்புகிறார்கள்.

Please Wait while comments are loading...