twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனோஜ் பாரதிராஜாவுக்கு இன்று 44வது பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!

    |

    சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வரும் நிலையில் இப்போது இயக்குனராக தயாராகிக் கொண்டிருக்கிறார்.

    தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்ட மனோஜ் இன்றுவரை பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளார்.

    ஹீரோவாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கி வரும் மனோஜ் செப்டம்பர் 11 ஆம் தேதியான இன்று தனது 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சார்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி மகிழ்வித்து வருகின்றனர்.

    போதைபொருள் வழக்கு.. கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை டாக்டருடன் ரகசிய திருமணம்? வைரலாகும் போட்டோ! போதைபொருள் வழக்கு.. கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை டாக்டருடன் ரகசிய திருமணம்? வைரலாகும் போட்டோ!

    தாஜ்மஹால்

    தாஜ்மஹால்

    மிகப்பெரிய திரை பின்புலத்தை கொண்ட நடிகர் மனோஜ், இயக்குனர் பாரதிராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்ததே. நடிப்பிற்காக பல்வேறு படிப்புகளை முடித்த மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான " தாஜ்மஹால்" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் இந்த திரைப்படம் நடிகை ரியா சென்-க்கும் அறிமுகப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    தோல்வியைத் தழுவியது

    தோல்வியைத் தழுவியது

    பொதுவாக பாரதிராஜாவின் படங்கள் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்து வரும், அதிலும் பாரதிராஜா தனது மகனையே வைத்து இயக்குகிறார் என்றதும் அதற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு ஆயின, மேலும் தாஜ்மஹால் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து இருக்க அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அனைவரிடமும் தொற்றிக்கொள்ள, சிறந்த கதை, சிறந்த இசை என அனைத்தும் இருந்தும் இந்த திரைப்படம் தோல்வியைத் தழுவியது.

    குணச்சித்திர கதாபாத்திரங்களில்

    குணச்சித்திர கதாபாத்திரங்களில்

    இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படமே தோல்வியை தழுவிய நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்த படத்தை காப்பாற்றியது. தாஜ்மஹால் திரைப்படத்திற்கு பிறகு சமுத்திரம், கடல் பூக்கள் என ஒரு சில திரைப்படங்களில் தம்பி கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மனோஜ் நடித்து வந்தார்.

    உதவி இயக்குனராக

    உதவி இயக்குனராக

    இவ்வாறு இவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் பலவும் தொடர் தோல்வியையும் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்று வந்த நிலையில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், மணிரத்னம் இயக்கிய பாம்பே மற்றும் இயக்குனர் ஷங்கரின் எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

    சாம்பியன்

    சாம்பியன்

    பல்வேறு தடைகளைத் தாண்டி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க தவித்துக்கொண்டிருக்கும் மனோஜ், சமீபத்தில் வெளியான" சாம்பியன்" திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

    சிகப்பு ரோஜாக்கள் பாகம்-2

    சிகப்பு ரோஜாக்கள் பாகம்-2

    மேலும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி உருவாகி வரும்" மாநாடு" திரைப்படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்பட்டு வரும் அதேசமயத்தில் சிகப்பு ரோஜாக்கள் பாகம்-2 திரைப்படத்தை இவர் இயக்க உள்ளதாகவும் ஒரு சில தகவல் கசிந்துள்ளது. அவ்வாறு சிகப்பு ரோஜாக்கள் பாகம் இரண்டை மனோஜ் இயக்கினால் அது இவருக்கு இயக்குனராக அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும்.

    44வது பிறந்தநாள்

    44வது பிறந்தநாள்

    இவ்வாறு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், வருங்கால இயக்குனராகவும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க அயராது உழைத்துக் கொண்டிருக்கும் நடிகர் மனோஜ் பாரதிராஜா செப்டம்பர் 11ம் தேதியன்று இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு திரையுலகைச் சார்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி மகிழ்வித்து வருகின்றனர்.

    English summary
    Celebrities wishes to Actor Manoj Bharathiraja on his 44th Birthday today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X