»   »  சந்திரமுகி முதலிடம், நம்பர் டூ கமல்: "சச்சின் அவுட்!

சந்திரமுகி முதலிடம், நம்பர் டூ கமல்: "சச்சின் அவுட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியான படங்களில் ரஜினியின் சந்திரமுகி வசூலில் சாதனை படைத்து வருகிறதாம். படையப்பாவின்வசூலை சந்திரமுகி முந்தி விடும் என்கிறார்கள்.

கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸும் வசூலில் தேறி வருகிறதாம். ஆனால் விஜய்யின் சச்சின் படு டல்லான வசூலை எடுத்துவருகிறது. ஜெய் ஆகாஷ், ராஜ்கிரண் நடிப்பில் வெளியான செவ்வேல், திரையிடப்பட்ட பல தியேட்டர்களில் எடுக்கப்பட்டுவிட்டது.

தமிழ்ப் புத்தாண்டுக்கு சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின், செவ்வேல் என நான்கு படங்கள் வெளியாகின. இதில்எதிர்பார்த்தது போல சந்திரமுகியும், மும்பை எக்ஸ்பிரஸும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதிகம் பூஸ்ட்செய்யப்பட்ட சச்சின், போட்ட பணத்தைத் திருப்பிக் கொடுக்குமா என்ற ரீதியில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

சென்னையைப் பொருத்தவரை, சந்திரமுகி திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளும் நிரம்பி வழிகின்றன. அதே அளவுரெஸ்பான்ஸ் மும்பை எக்ஸ்பிரஸுக்கும் கிடைத்துள்ளது.

படம் வெளியான 10 நாட்களில் மட்டும் ரூ. 60 லட்சம் வரை லாபம் ஈட்டியுள்ளதாம் சந்திரமுகி. புத்தாண்டுக்கு வெளியான நான்குபடங்களில் சந்திரமுகியின் வசூல் 90 சதவீத மார்க்கெட்டைப் பிடித்துள்ளதாம்.

மும்பை எக்ஸ்பிரஸைப் பொருத்தவரை 80 சதவீத மார்க்கெட்டை அது பிடித்துள்ளது. இந்தப் படத்திற்கு பெரும்பாலும்குடும்பத்துடன் ரசிகர்கள் வந்து பார்க்கிறார்கள். வழக்கமான காமெடியாக இல்லாமல், வித்தியாசமான முறையில் இந்தப் படத்தின்காமெடிக் காட்சிகள் அமைந்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

போட்ட பணத்தை மட்டுமல்லாது, நல்ல லாபத்தையும் பார்க்க முடியும் என்று விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த சச்சின், விநியோகஸ்தர்களுக்குப் பீதியைக் கொடுத்துள்ளதாம். முதல் சில நாட்கள் கூட்டத்தைசேர்த்த சச்சின் பின்னர் டல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இத்தனைக்கும் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸை விட கதையில் சச்சின்நம்பர் ஒன்னாக இருந்தும் இந்த நிலை.

படம் சரியாகப் போகவில்லை என்பது ஒருபுறம் இருக்க, போட்ட பணமாவது திரும்ப வருமா என்ற சந்தேகம்விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ளதாம்.

ரஜினிக்கு இணையாக தன்னை கருதிக் கொண்ட விஜய்க்கு இந்தப் படம் செம அடியைத் தரும் என்கிறார்கள். இரவுக் காட்சிகளும்,விடுமுறை நாட்களிலும் மட்டுமே சச்சின் திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் வருகிறதாம். அதுவும் கூட ஹவுஸ் புல் போடமுடியாத அளவுக்கு ஏராளமான இருக்கைகள் காலியாகவே உள்ளன.

விஜய் ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் வருவதாகவும், பொதுமக்களை இப்படம் கவரவில்லை என்றும் தியேட்டர்உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

திருப்பாச்சி, கில்லி போல இந்த படம் ஓடாது என்றும் உறுதியாக கூறுகிறார்கள். இதன் மூலம் ரஜினி, கமல் படங்கள் நேரடியாகமோதினால் மற்ற நடிகர்களின் படங்கள் அடிபட்டுப் போகும் என்ற வாதம் நிரூபணமாகியுள்ளதாகவும் தியேட்டர்உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இந்தப் படங்களோடு வெளியான செவ்வேல் படு தோல்வி அடைந்துள்ளது. படம் பரவாயில்லை என்ற பேச்சு இருந்தும் கூட பலதியேட்டர்களில் படத்தைத் தூக்கி விட்டனர்.

படம் வெளியான முதல் நாள் மட்டுமே ஹவுஸ் புல் போர்டை மாட்டினார்கள். அதன் பின்னர் விரல் விட்டு எண்ணும் அளவுக்கேபடம் பார்க்க ஆட்கள் வருகிறார்கள். இதனால் பல தியேட்டர்களில் படத்தைத் தூக்கி விட்டார்கள். சென்னையில் ஒரு தியேட்டரில்ஒரு காட்சியை ஆபரேட்டர், டார்ச் பாய், டிக்கெட் கிழிப்பவர் உள்பட 30 பேர் மட்டுமே படம் பார்த்திருக்கிறார்கள்.

தமிழ்ப் புத்தாண்டு ரிலீஸிலேயே அதிக வசூலைக் கொடுத்துள்ள படங்கள் சந்திரமுகியும், மும்பை எக்ஸ்பிரஸ்ஸும் மட்டும்தான்.பாபா படுதோல்வியால் வெறுத்துப் போயிருந்த ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் சந்திரமுகி மிகப் பெரிய வரமாகஅமைந்துவிட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil