»   »  சந்திரசேகர் வயிற்றில் கத்தி பாய்ந்தது!

சந்திரசேகர் வயிற்றில் கத்தி பாய்ந்தது!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
தோட்டா படப்பிடிப்பின்போது நடிகர் சந்திரசேகர் வயிற்றில் கத்தி பாய்ந்தது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

மச்சக்காரன் படத்தை முடித்து விட்ட ஜீவன் அடுத்து பிரியா மணியுடன் இணைந்து தோட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

பிரியா மணியின் அப்பாவாக ஆட்டோ டிரைவர் வேடத்தில் சந்திரசேகர் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

படப்பிடிப்பின்போது, ஒரு காட்சியில் ரவுடிக் கும்பலுடன் மோதுவது போன்ற காட்சியில் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் சந்திரசேகரின் வயிற்றில் கத்தியால் குத்துவது போல ஒரு காட்சி வைத்திருந்தார்கள்.

வழக்கமாக இதுபோன்ற காட்சியில், பொம்மை கத்தியை தான் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த கத்தி சிறியதாக இருந்ததால் உண்மையான கத்தியை பயன்படுத்தியுள்ளனர். வயிற்றில் குத்துவது போல தான் இருக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் கத்தி சந்திரசேகர் மேல் படக்கூடாது என்று டைரக்டர் செல்வா திரும்ப திரும்ப சொல்லி காட்சியை படமாக்கியிருக்கிறார்.

ஆனால் ஸ்டண்ட் நடிகர் கத்தியை சந்திரசேகரின் வயிற்றில் நிஜமாகவே சொருகி விட்டார். கத்தி வயிற்றில் பாய்ந்த வேதனையில் கதறியபடி கீழே விழுந்து விட்டார் சந்திரசேகர்.

படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சந்திரசேகரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு வயிற்றில் பாய்ந்த கத்தியை பத்திரமாக எடுத்து விட்டனர். தற்போது சந்திரசேகர் நலமுடன் இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாலும், சந்திரசேகருக்கு எந்த ஆபத்துமில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil