»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சொல்லி அடிப்பேன் பட தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்தை நடிகை சாயாசிங் டெலிபோனில் காய்ச்சி எடுத்திருக்கிறார்.

அவ்வளவுதான் என்று நினைத்திருந்த சாயாசிங் இப்போது இரண்டு படங்களில் கதாநாயகியாக நடிக்கிறார். இரண்டு படங்களிலும் ஸ்டார்வேல்யூ உள்ள யாரும் ஹீரோவாக நடிக்கவில்லை.

சொல்லி அடிப்பேன் படத்தில் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் தேஜாஸ்ரீ இன்னொரு கதாநாயகியாக சாயாசிங்குடன்மல்லுக்கு நிற்கிறார்.

இதற்கிடையே பங்கஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹென்றி தயாரிக்கும் ஒரு படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடிக்க சாயாசிங்ஒப்பந்தமாகியுள்ளார்.


பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, புதுமைப்பித்தன் என நல்ல படங்களைத் தயாரித்தவரான ஹென்றி இப்போது ஒரே நேரத்தில் இரண்டுபடங்களைத் தயாரிக்கவுள்ளார். இரண்டிலும் பார்த்திபன் தான் கதாநாயகன்.

ரவுடி (இது தமிழ்ப் பெயரா என்பதை ராமதாஸிடம் கேட்க வேண்டும்) என்ற படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக சாயாசிங் நடிக்கிறார்.இவர்களுடன் வடிவேலு, மகாதேவன், மணிவண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

பார்த்திபன்- சாயாசிங் ஜோடி ஒருபுறமிருக்க, ஒரு புதுமுக ஜோடியும் படத்தில் நடிக்கிறது. யுவராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிஇயக்குகிறார்.

ஒரு மனிதன் பிறப்பதே இன்னொரு மனிதனை வாழ வைப்பதற்காகத்தானே தவிர, அழிப்பதற்கு அல்ல என்ற கருத்தை மையமாக வைத்துஇந்தப் படம் உருவாகிறது.

ஹென்றி தயாரிக்கும் மற்றொரு படம் அட... இதில் சாயாசிங் இல்லை. நாம் ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது, எதிர்பாராத ஒன்றுநடந்தால் அட... என்போமே, அதுதான் படத்தின் கரு.

பார்த்திபன் கதாநாயகன் என்பதால், கதாநாயகியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு வடிவேலுவை புக் செய்துள்ளார்கள். இரண்டு பேரும்இருந்தால் படத்திற்கு மார்க்கெட் வேல்யூ கிடைக்கும் என்பதுதான் காரணம்.

மற்ற நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். இந்த இரண்டு படங்களிலும் தாமரையின் பாடல்களுக்கு இமான் இசையமைக்கிறார்.

சரி, முதல் பாராவில் சொன்ன மேட்டருக்கு வருவோம். கையில் இருப்பது இரண்டே இரண்டு படங்கள்தான் என்றாலும் சூட்டிங்ஸ்பாட்களில் சாயாசிங்கின் லொள்ளு தாங்க முடியவில்லை.

சொல்லி அடிப்பேன் பட சூட்டிங்கின்போது, எல்லோருக்கும் கம்பெனி சாப்பாடு வர, சாயாசிங் மட்டும் சிக்கன் கபாப் மற்றும் சிக்கன் டிக்காஎன்று ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்துள்ளார். அதுவும் ஒவ்வொரு அயிட்டத்தையும் இரண்டு, இரண்டாகக் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் அயிட்டங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து புரொடக்ஷன் ஆட்கள் சாயாசிங்கிற்கு போன் செய்துள்ளார்கள். அவரும்வேறு சில அயிட்டங்களை ஆர்டர் கொடுத்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் மறுபடியும் ஒரு கால் வர, இதுவும் புரொடக்ஷன் ஆட்கள்தான் என்ற எண்ணத்தில் சாயாசிங் காச்மூச் என்றுகத்தியிருக்கிறார். ஆனால் எதிர்முனையில் இருந்தது தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்.


முந்தைய தினம் சாயாசிங் கேட்டிருந்த பணம் ரெடி என்பதைச் சொல்ல போன் செய்த கிருஷ்ணகாந்த், மறுமுனையில் இருந்து வந்த கூவம்வார்த்தைகளைக் கேட்டு அரண்டு போய்விட்டார்.

பின்பு சமாளித்துக் கொண்டு, நான் புரொடியூஸர் பேசுறேன் என்று சொல்ல, சாயாசிங் குரலில் அநியாயத்திற்குக் குழைவு வந்துவிட்டது.அதனையடுத்து அன்றைய தினம் முழுவதும் ஸாரி, ஸாரி என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் போல் பாடியிருக்கிறார்.

பின்னே, எக்குத்தப்பாக கெட்ட பேர் வந்து மற்ற தயாரிப்பாளர்கள் யாரும் சான்ஸ் தராவிட்டால்..?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil