»   »  சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

Subscribe to Oneindia Tamil


செவன்த்சானல் நிறுவனமும், தமிழ் திரைப்பட அகாடமியும் இணைந்து சென்னையில் நான்கு நாட்கள் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இதுகுறித்து செவன்த் சானல் நிறுவனத்தைச் சேர்ந்த மாணிக்கம் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 3 வருடங்களாக இந்த பட விழாவை நடத்தி வருகிறோம்.

இந்த ஆண்டு சுற்றுச்சூழலை மையமாக வைத்து பட விழா நடத்தப்படுகிறது. வருகிற 25ம் தேதி சென்னை திரைப்பட வர்த்தக சபை ஆடிட்டோரியத்தில் பட விழா தொடங்குகிறது.

விழாவின் முக்கிய அம்சமாக, முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல் கோர் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட விருது பெற்ற படம் திரையிடப்படுகிறது.

12 நாடுகளைச் சேர்ந்த 20 படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகிறது என்றார்.

Please Wait while comments are loading...