»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

போலீஸ் வேலைக்கு சேர வந்து சினிமாவில் நுழைந்து விட்ட சென்னைப் பெண் சுஜாதா சேரனின் கடிதங்கள் என்ற படத்தில் நடிப்பதுஉறுதியாகி விட்டது. ஆனால், செகண்ட் ஹீரோயின் சான்ஸ் தானாம்.

சென்னையில் நடந்த காவலர் தேர்வில் கலந்து கொண்ட அயனாவரத்தைச் சேர்ந்த சுஜாதா அதில் தோல்வி அடைந்தார். கவலையுடன் வீடுவந்து சேர்ந்த அவருக்கு அடுத்த நாள் சேரனிடமிருந்து அழைப்பு வந்தது, மேக்கப் டெஸ்டுக்கு வரவும் என்று.

ஒரே நாளில் தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த முகமாகிப் போனார் சுஜாதா. சேரன் படத்தில் நடிக்கப் போகும் பெண் என்று அவரைப்பற்றி எழுதாத பத்திரிக்கைகள் இல்லை. இதனால் கொஞ்சம் குழம்பிப் போனது சேரன் தரப்பு.

இன்னும் மேக்கப் டெஸ்டே முடியவில்லை. அதற்குள் உறுதியாக எழுதத் தொடங்கி விட்டார்களே என்று சேரன் தரப்பு முனுனுத்தது. இதனால்சுஜாதா நடிப்பாரா, மாட்டாரா என்ற குழப்பம் கூட ஏறப்ட்டது.

ஆனால் இப்போது குழப்பம் நீங்கி விட்டது. சேரன் படத்தில் சுஜாதா நடிக்கிறாராம். ஆனால் செகன்ட் ஹீரோயினாக. முக்கிய ஹீரோயினாகமலையாளப் புதுமுகம் பிரியா என்பவர் நடிக்கப் போகிறாராம். படத்திற்கு கடிதங்கள் என்று பெயர் வைத்துள்ளாராம் சேரன்.

இன்னும் சில நாட்களில் கடிதங்களை எழுதப் போகிறாராம், அதாவது ஷூட்டிங்கைத் தொடங்கப் போகிறாராம் சேரன்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு டூரிங் டாக்கீஸ், பொக்கிஷம் மற்றும் அன்புத் தோழி ஆகிய படங்களிலும் பாராதிராஜா இயக்கும் ஒருபடத்திலும் நடிக்க இருக்கிறார் சேரன்.

பொக்கிஷம் படத்தில் அபர்ணா, சாயா சிங் ஆகியோர் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். அதே போல ஸ்னேகாவுக்கும் ஒரு சிறியரோல் இருக்குமாம்.

இந்தப் படங்களுக்கு நடுவே விஜய்-கோபிகாவை வைத்து ஒரு படத்தை இயக்கவும் இருக்கிறார் சேரன்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil