»   »  சினேகா லிப்ஸும் 'காலி'!

சினேகா லிப்ஸும் 'காலி'!

Subscribe to Oneindia Tamil
Sneha with Cheran
'முத்தா' பட்டியலில் சினேகாவும் ஒரு வழியாக சேர்ந்து விட்டார். பிரிவோம் சந்திப்போம் படத்தில் சேரனும், சினேகாவும் முத்தக் காட்சியில் நடித்துள்ளனராம்.

முத்தக் காட்சிகளை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியவர் கமல்ஹாசன். அறிமுகப்படுத்திய அவரது உதடுகள் இப்போது காய்ந்து விட்டன. ஆனால் அவரது வழித் தோன்றல்களாக பலரும் கிளம்பி, முத்த 'யுத்தத்தை' வெற்றிகரமாக நடத்திக் கொண்டுள்ளனர்.

அதிலும் சமீப காலமாக முத்தக் காட்சிகள் படம் தவறாமல் இடம் பெற்று இதயங்களில் 'ரம்'மை இறக்கி வருகிறது. இத்தனை செகண்ட் இவர் கொடுத்தார், அதை இவர் முறியடித்தார், இவர் இப்படிக் கொடுத்தார், திடீரென்று கொடுத்தார், தடாலடியாக கொடுத்தார் என்று போட்டி போட்டுக் கொண்டு 'உம்மா' கொடுத்து வருகிறார்கள் கோலிவுட் நாயகர்களும், நாயகிகளும்.

இந்த வரிசையில் லேட்டஸ்டாக ஒரு முத்தக் காட்சி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் முத்தம் கொடுக்கப்பட்ட நாயகிதான் இதில் விசேஷமானவர். அவர் சினேகா.

தமிழ் சினிமாவில், ஹீரோவின் உதடு பட்டு ஈரமாகாத ஒரே உதடாக சினேகாவினுடையது மட்டும்தான் இருந்தது. இப்போதும் அவரும் முத்தக் களத்தில் குதித்து விட்டார்.

எக்காரணம் கொண்டும் கிளாமரை வெளிப்படுத்தும் வகையில் நடிக்க மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சினேகா. அதிலும் உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிடும் காட்சிகளில் கண்டிப்பாக நடிக்க மாட்ேடன் என்று உறுதியாக இருந்து வந்தார்.

'முத்த மன்னன்' கமல்ஹாசனுடன் (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்) நடித்தபோதே, முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க முடியாது என்று தீர்மானமாக கூறிய தைரியசாலி, இப்போது பிரிவோம் சந்திப்போம் படத்துக்காக சேரன் தன்னை முத்தமிட சம்மதித்துள்ளார்.

2 நாட்ளுக்கு முன்புதான் இந்த இனிய 'சந்திப்பு' நடந்ததாம். இயக்குநர் கரு. பழனியப்பன், சேரனும், நீங்களும் முத்தமிடுவது போல நடிக்க வேண்டும், அதற்கு சம்மதிக்க வேண்டும் என்று சினேகாவிடம் கேட்டுள்ளார். அதற்கு யோசிக்காமல் உடனே ஓ.கே. சொல்லி விட்டார் சினேகா.

இதையடுத்து சேரனிடம் கூறினார். ஆனால் அவர் தயங்கியுள்ளார். பிறகு சினேகாவே, சேரனிடம் பேசி அவரை தைரியப்படுத்தி நடிக்க சம்மதிக்க வைத்தாராம். இதையடுத்து இந்த முத்தக் காட்சி படமாக்கப்பட்டது.

சேரனுக்கும் இது முதல் அனுபவம் என்பதால் ரொம்பவே எக்சைட்டிங்காக இருந்ததாம். இந்த முத்தக் காட்சி 7 டேக்குகள் வாங்கியதாம். எந்தவித ஆபாசக் கலப்பும் இல்லாமல் படு இயல்பாக, சிறப்பாக வந்துள்ளதாம் இந்த முத்தக் காட்சி.

சினேகா, சேரனின் முதலிரவுக் காட்சியின்போது இந்த முத்தக் காட்சி இடம் பெறுகிறதாம். இருவருமே பாரம்பரிய அனுஷ்டானங்கள் நிரம்பிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். முதலிரவின்போது இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது உணர்ச்சிவயப்பட, இடம் பெறுகிறது இந்த முத்தக் காட்சி. 6 செகண்ட் இந்த முத்தக் காட்சி இடம்பெறுகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil