»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஆட்டோகிராப் படம் இன்றுடன் (ஏப்ரல் 4) 50 நாட்களைத் தாண்டி மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தின் வசூல் சமீபத்திய படங்களின் ரெக்கார்டை எல்லாம் முறியடித்திருக்கிறது. கடந்த ஆண்டில்மிகப் பெரிய வசூல் சாதனை படைத்த சாமி படத்தைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டதாம்ஆட்டோகிராப்.

சாமி படம் 100 நாட்களில் வாரிக் காட்டியதை ஆட்டோகிராப் ஐம்பதே நாட்களில் முறியடித்துக்காட்டி சாதனை படைத்திருக்கிறது.

தமிழகம் தவிர கேரளத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையங்குகளில் 50வது நாளைத்தாண்டியுள்ளது இந்தப் படம். பெங்களூரில் கொஞ்சம் லேட்டாக ரிலீஸ் ஆனாலும் அங்கும் சூப்பர்ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனால் மிக மகிழ்ச்சியுடன் உலா வரும் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளரான சேரன் கொஞ்சம்நெர்வசாகவும் இருக்கிறார். அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமாகிப் போச்சே என்றஇன்பமான கவலை தான் காரணமாம்.

ரூ. 3 கோடியில் தயாரான இப் படத்தினால் இப்போதே ரூ. 11 கோடி (தெலுங்கு ரீ மேக் உரிமையைவிற்றதும் சேர்த்து) லாபத்தைப் பார்த்துவிட்டார் சேரன். இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால் மேலும் சில கோடிகளை சேரனும் வினியோகஸ்தர்களும் அள்ளுவார்கள்.


ஆட்டோகிராப் வெற்றியால் சேரனுக்கு படங்களில் 2 ஹீரோ வேஷங்கள் கிடைத்திருப்பதோடு,இதில் நடித்த கோபிகா தமிழோடு மலையாளத்திலும் ஹாட் கேக் ஆகிவிட்டார். ஸ்னேகாவுக்கும்புதிய வாய்ப்புக்கள் மளமளவென வந்து சேர, மல்லிகாவுக்கு தெலுங்கு சான்ஸ்கள் கிடைக்கஆரம்பித்திருக்கின்றன.

இதனால் மொத்த யூனிட்டே மகிழ்ச்சியில் திளைக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil