»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கில்பாங்ஸ் சின்னி ஜெயந்த் மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளார் !!!. படத்தின் பெயர் ஒரு தடவை சொன்னா.

ரஜினி மூலமாக திரையுலகிற்கு அறிமுகமான சின்னி, சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் அவை சிறிய அளவில் கூடஅவருக்குப் பெயர் வாங்கித் தரவில்லை. தயாரிப்பாளர்களுக்கு தலைக்கு துண்டு மட்டுமே மிஞ்சியது. இதனால் அர்ஜூனுடன் சேர்ந்தகாலேஜூக்குப் போவது போன்ற துண்டு துக்கடா வேடங்களில்தான் நடித்து வந்தார்.

இப்போது மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறார் சின்னி.

ஜெயா மருது நிறுவனம் தயாரிக்கவுள்ள ஒரு தடவை சொன்னா படத்தில் ரஜினி ரசிகர் வேடத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சின்னி ஜெயந்த். அவருக்கு ஜோடி அபிதா (சேது புகழ்).

பாக்யராஜின் பல்வேறு படங்களில் சிறுவனாக நடித்துள்ள ஹாஜா ஷெரீப் (இப்போது வளர்ந்து விட்டார்) முக்கிய வேடத்தில் இந்தப்படத்தில் வருகிறார். இதுதவிர செந்தில், தாமு, வையாபுரி என தெரிந்த முகங்களும் படத்தில் இருக்கிறார்கள்.

இளங்குமரன் என்பவர் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தை ஜமீன் ராஜ் இயக்குகிறார்.

படம் கில்மா ஆகாமல் இருந்தால் சரி !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil