»   »  சிரஞ்சீவி படம் சென்னையில் ஹிட்!

சிரஞ்சீவி படம் சென்னையில் ஹிட்!

Subscribe to Oneindia Tamil

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள சங்கர்தாதா ஜிந்தாபாத் படத்திற்கு சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சஞ்சய் தத் இந்தியில் நடித்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ். மெகா ஹிட் ஆனது. இதையடுத்து இப்படத்தை தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரிலும், சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் தெலுங்கிலும், உப்பிதாதா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் கன்னடத்திலும் அடுத்தடுத்து ரீமேக் செய்து வசூலை அள்ளினர்.

முன்னாபாயின் 2ம் பாகமாக சலே ரஹோ முன்னாபாய் வெளியானது. இந்தப் படமும் செம ஹிட் ஆனது. இதையடுத்து தெலுங்கில் இப்படத்தை சங்கர்தாதா ஜிந்தாபாத் என்ற பெயரில் ரீமேக் செய்து விட்டனர்.

இதில் கரீஷ்மா கோடக் என்ற புதிமுகம் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சிரஞ்சீவி நடிக்க, பிரபுதேவா இயக்க இப்படம் ஆந்திரா முழுவதும் ரிலீஸாகியுள்ளது. அப்படியே சென்னையிலும் ரிலீஸ் செய்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர்களில் 21 காட்சிகளாக சங்கர்தாதா ஜிந்தாபாத் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை நகரில் மட்டும் நான்கு தியேட்டர்களில் படத்தை திரையிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

தமிழகத்தில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஆந்திர மீடியாக்கள் எதிர் மறையான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனவாம். படம் சரியில்லை என்ற ரேஞ்சுக்கு அவர்கள் எழுதவே சிரஞ்சீவி ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

சிரஞ்சீவிக்கு எதிரான சிலர் கிளப்பி விட்டுள்ள அவதூறுப் பிரசாரம் இது என்று அவர்கள் குமுறுகின்றனர். இப்படத்தை ஓட விடாமல் செய்து விட்டால், சிரஞ்சீவி அரசியலுக்கு வருவதைத் தடுத்து விடலாம் என்று நினைப்பவர்கள்தான் இதன் பின்னணியில் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் இதுகுறித்துக் கவலைப்படாமல், படத்தை மெகா ஹிட் ஆக்கும் முயற்சிகளில் சிரஞ்சீவி இறங்கியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil