»   »  இறங்கி வந்தார் சிரஞ்சீவி

இறங்கி வந்தார் சிரஞ்சீவி

Subscribe to Oneindia Tamil


காதலருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் மகள் ஸ்ரீஜா கல்யாணம் செய்து கொண்டதால் அதிர்ச்சியில் மூழ்கியிருந்த தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது மனம் இறங்கி, கல்யாணத்தை ஏற்பதாகவும், கணவருடன் வீட்டுக்குத் திரும்பி வருமாறும் மகளுக்கு பத்திரிக்கைகள் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Click here for more images

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 2வது மகள் ஸ்ரீஜா சிஏ படித்து வருகிறார். இவர் பிடெக் படிக்கும் மாணவரான ஷிரிஷ் பரத்வாஜ் என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை வீட்டில் தெரிவித்த ஸ்ரீஜாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

மகளின் காதலை ஏற்காத சிரஞ்சீவி, படிப்புக்கு தடா போட்டார். வீட்டோடு, ஸ்ரீஜாவை முடக்கி வைத்தார். ஆனால் ஸ்ரீஜா - பரத்வாஜின் காதல் மேலும் வலுப்பட்டது. சமயம் பார்த்து இருவரும் காத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 17ம் தேதி வீட்டில் உள்ளவர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, ஸ்ரீஜா காதலருடன் வீட்டை விட்டுப் பறந்தார். ஆர்ய சமாஜத்தில் வைத்து பரத்வாஜை கல்யாணம் செய்து கொண்டார்.

சிரஞ்சீவி குடும்பமும், அவரது உற்றார், உறவினர்கள், ரசிகர்கள், திரையுலகினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என ஆந்திராவே இந்த கல்யாணத்தால் அதிர்ந்து போனது.

ஸ்ரீஜாவின் கல்யாணத்தால் அதிர்ச்சியுள்ள சிரஞ்சீவியின் ரசிகர்கள் அவரது வீட்டு முன்பு திரண்டனர். ரசிகர்களின் கொதிப்பால் பயந்து போன பரத்வாஜின் குடும்பத்தினர் தலைமறைவாகி உறவினர் வீடுகளுக்குப் போய் விட்டனர். ஸ்ரீஜாவும், பரத்வாஜும் கூட தலைமறைவாகி விட்டனர்.

இந்த நிலையில் ஓரிரு நாட்களில் தனது முடிவை அறிவிப்பதாக சிரஞ்சீவி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்துப் பத்திரிக்கைகளுக்கும் சிரஞ்சீவி ஒரு பேக்ஸ் செய்தியை அனுப்பியுள்ளார். அதில் தனது மகளின் கல்யாணத்தை ஏற்பதாகவும், கணவருடன் அவர் வீடு திரும்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிரஞ்சீவி அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், கடந்த இரு தினங்களாக எனது மகள் ஸ்ரீஜா வீட்டை விட்டு வெளியேறிய அதிர்ச்சியில் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசையாகும்.

என் மகளின் விருப்பு வெறுப்புக்கு எப்போதும் மரியாதை கொடுப்பேன். மேஜரான ஸ்ரீஜா எடுத்த இந்த முடிவால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தது உண்மைதான்.

இப்போது நாங்கள் அனைவரும் தெளிவாகி விட்டோம். மகளின் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம் என்று குடும்பத்தினர் அனைவரும் தீர்மானித்துள்ளோம். மகளின் திருமணத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவர்கள் வீட்டுக்கு வந்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன்.

எனது மகள் எங்கு இருக்கிறாள் என்று தெரியாததால் பத்திரிகைகள் மூலமாக ஸ்ரீஜாவுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ஸ்வீட்டி ஸ்ரீஜா, நீ எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்கவேண்டும். உன்னுடைய சந்தோஷம்தான் என்னுடைய சந்தோஷம் ஆகும்.

உன் காதல் திருமணத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம்.

மகள் ஸ்ரீஜா திருமணத்தால் வேதனை அடைந்த நலம் விரும்பிகள், ரசிகர்கள் எல்லோரையும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் எல்லோரும் என் மகளை ஆசிர்வதியுங்கள். அதுதான் அவருக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாகும் என்று சிரஞ்சீவி கூறியுள்ளார்.

தங்களது திருமணத்தை சிரஞ்சீவி ஏற்றுக் கொண்டுள்ளதால் விரைவில் ஸ்ரீஜாவும், பரத்வாஜும் வீடு திரும்பக் கூடும் என்று தெரிகிறது. தற்போது அவர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. முதலில் சென்னைக்குப் போய் விட்டதாக ஒரு தகவல் கூறியது. தற்போது மைசூரில் அவர்கள் இருக்கலாம் எனக் கூறுகிறது.

Read more about: barathwaj, chiranjeevi, newspapers, srijah

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil