»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழர்களின் சாயங்காலத்து சந்தோஷங்களில் ஒன்று முடிவுக்கு வரப் போகிறது. சித்தி சீரியல் முடியப் போவதுகுறித்து வைரமுத்துவிடம் கேட்டால் இப்படித் தான் சொல்வார்.

தினத்தந்தியின் கன்னித் தீவு மாதிரி சன் டிவியில் சித்தி ரொம்பபபபபப... நாளாய் ஒளிபரப்பாகி வருகிறது.

தினமும் இரவு 9.30 மணிக்கு தமிழர்களை அரஸ்ட் செய்து டிவிக்கு முன் உட்காரச் செய்து வரும் சித்தி சீரியல்முடியப் போகிறது. குழந்தைகளை ஹோம் வொர்க் எழுத வைக்க தாய்மார்கள் பயன்படுத்தும் புதிய அன்பாயுதமும்சித்தி தான். (ஹோம் வொர்க்கை சீக்கிரம் எழுதினா தான் நீ சித்தி இன்னிக்கி பார்க்கலாம்!).வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் எந்த நிகழ்ச்சியும் இப்படி ஈர்த்ததில்லை.

கிழக்கே போகும் ரயிலில் அறிமுகமாகி பல அற்புதமான படங்களில் நடித்தும் கிடைக்காத புகழை சித்தி டிவி சீரியல்ராதிகாவுக்குக் கொடுத்துள்ளது.

சித்திக்கு துவக்கத்தில் அவ்வளவு பெரிதான வரவேற்பு இல்லை. ஆனால் நாள் ஆக ஆக சித்தி தொடர்விறுவிறுப்பாகி விட்டது. ரசிகர் கூட்டம் பெரிதாகி விட்டது. இப்போது சித்தியின் அடிமைகள் அத்தனைவீடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

இந்த சீரியல் ஓடும் நேரத்தில் வேறு சேனல்களுக்குத் தாவ பல வீடுகளில் தடா விதிக்கப்பட்டுள்ளதால், இளையதலைமுறையினர் 9.30க்கு வீட்டை விட்டு வெளியில் கிளம்பி ஓடிவிடுவதும் நடந்து வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதியே கூட சித்தித் தொடருக்கு பெரிய ரசிகராம். ஒருவேளை பார்க்க முடியாவிட்டாலும்கூட வீட்டினர் வீடியோவில் பதிவு செய்து வைத்து அவர் வந்த பின் காட்டுகிறார்களாம்.ராதிகாவுக்கு இத்தனை பெயரைப் பெற்றுத் தந்திருக்கும் சித்தித் தொடர் விரைவில் நிறைவடையப் போகிறது.தொடர் முடிவுக்குப் பின் மிகப் பிரமாண்டமான அளவில் இதில் நடித்த அனைவருக்கும் பாராட்டு விழா நடத்தராதிகா திட்டமிட்டுள்ளார்.

வெள்ளி விழாத் திரைப்படங்களுக்குக் கூட இத்தனை பெரிய அளவில் விழா நடந்ததில்லை என அத்தனை பேரும்மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு விழாவை கொண்டாடித் தள்ளி விட இப்போதே பிளான் பண்ண ஆரம்பித்துவிட்டாராம் ராதிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil