»   »  எய்ன்ஸ்டீனுடன் இணையும் சுட்டி டிவி!

எய்ன்ஸ்டீனுடன் இணையும் சுட்டி டிவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நார்வையைச் சேர்ந்த பிரபல கலைஞர் எய்ன்ஸ்டீன் கிறிஸ்டியான்சன் சுட்டி டிவியுடன் கை கோர்த்து சுட்டி டிவியில் நிகழ்ச்சிகள் வழங்கவுள்ளார்.


சன் குழுமத்திலிருந்து குழந்தைகளுக்காக பிரத்யேகமாக ஒளிபரப்பாவது சுட்டி டிவி. சுட்டீஸ்கள் மத்தியில் ஹிட் ஆகியுள்ள இந்த டிவியில் புதுப் புது நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டு குட்டீஸ்களை ஈர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலகப் புகழ் பெற்ற கலைஞரும், ஷோமேனுமான எய்ன்ஸ்டீனுடன் சுட்டி டிவி கரம் கோர்க்கிறது.

கலை மற்றும் கைவினைக் கலையில் பிரபலமானவர் எய்ன்ஸ்டீன். குழந்தைளுக்கு கலைப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் மூலம் பல விஷயங்களைப் போதிப்பதில் எய்ன்ஸ்டீன் கில்லாடி. உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இவருடைய ரசிகர்கள் ஆவர்.

வழக்கமான வரை படக் கலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, வித்தியாசமாக செய்பவர் எய்ஸ்ன்டீன். என்ன பொருளை எய்ன்ஸ்டீனிடம் கொடுத்தாலும் அதை வைத்து வித்தை காட்டுபவர் எய்ன்ஸ்டீன்.

தற்போது எய்ஸ்ன்டீன் சுட்டி டிவிக்காக செப்டம்பர் மாதம் இந்தியா வரவுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், எய்ன்ஸ்டீன் பங்கேற்கவுள்ள ஓவியப் போட்டியில் பங்கேற்குமாறு அனைத்து வகையான குழந்தைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

குழந்தைகளின் கலைத் திறன், கற்பனைத் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது, மேம்படுத்துவது என்பது குறித்து கருத்தரங்கையும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அதிலும் எய்ன்ஸ்டீன் பங்கேற்கிறார்.

இந்த ஓவியப் போட்டியின் இறுதிப் போட்டியில், உடல் ஊனமுற்ற, மன ஊனமுற்ற குழந்தைகளும் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர். எய்ன்ஸ்டீனுடன் இணைந்து அவர்களும் படம் வரையவுள்ளனர்.

இவர்கள் வரையும் படங்கள் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் வரும் பணம், சிறப்புக் குழந்தைகளுக்காக சேவை செய்து வரும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.

கலை மற்றும் கைவினைக் கலையில் புதுசு புதுசாக, தினுசு தினுசாக குட்டீஸ்கள் சிந்திக்க வேண்டும், சமூகத்திற்கு உபயோகமான வகையில், தங்களது திறமையை பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil