twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பெஷல்ஸ்

    By Staff
    |

    தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலிருந்து கொடிகட்டிப்பறக்கும் நடிகைகள் பெரும்பாலானோர் வேறு மாநிலங்களிலிருந்து வந்தவர்களே.

    இப்போது தமிழ் சினிமா உலகம் மிகப் பெரிய வளர்ச்சி கண்டு விட்டாலும் இங்கு டாப் மோஸ்ட்டில் இருப்பவர்களும், அதிகமாகப் பேசப்படுபவர்களும்மும்பையிலிருந்து வந்த அல்ட்ரா மாடர்ன் அழகிகளே.

    இதுகுறித்து சினிமா பிரமுகர்கள் கூறுகையில், மும்பை நாயகிகள் கவர்ச்சியாக ஆளை அடித்துப் போடும் அழகுடன் இருக்கிறார்கள். கேரளாவிலிருந்து வரும்பெண்களும் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

    ஆந்திராவிலிருந்து வரும் பெண்களும் சூப்பர் பிகர்களாக இருக்கிறார்கள். தமிழ் பெண்கள் மிகவும் கட்டுப்பாடான, ஆசாரமான குடும்பத்திலிருந்துவந்தவர்களாக இருக்கிறார்கள். எதற்கும் தயார் என்ற நிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது

    குறிப்பாக கோயம்புத்தூர், மதுரை பகுதிகளிலிருந்து வரும் பெண்கள் சினிமாவில் தலைகாட்டவே தயக்கும் காட்டும் வகை என்கின்றனர்

    சரத்குமாரின் சமீபத்திய படம் ஒன்றில் சங்கவியும், பூனமும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவருக்குமே படத்தில் பக்கா தமிழ் பொண்ணுவேடம். ஒருவருக்கு டீ கடை உரிமையாளர் கேரக்டர். இன்னொருவருக்கு எஸ்டேட் உரிமையாளரின் மகள் கேரக்டர்.

    அடிப்படையில் பார்த்தால் இருவருமே வேறு மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். சங்கவி மைசூரிலிருந்து வந்தவர். பூனம் மும்பையிலிருந்து வந்தவர். அம்பிகா,ராதாவிலிருந்து கவுதமி வரையிலும், தற்போதைய குஷ்பு, சிம்ரன் வரை தமிழ்த்திரையுலகில் நம்பர் ஒன்னாக இருந்தவர்கள் அனைவருமே வேறுமாநிலத்தவரே. ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல.

    சிம்ரனை ஓரங்கட்டுகிறார் ஜோதிகா:

    துள்ளாத மனமும் துள்ளும் படம் வரை நம்பர் ஒன் இடத்தில் இருந்த சிம்ரனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு வளர்ந்து விட்டார் கவர்ச்சி ராக்கெட்ஜோதிகா. இவர் ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்த நக்மாவின் தங்கை.

    சிம்ரனுக்குத் திருமணம் என்பது கூட அவருக்குப் பட வாய்ப்புக்கள் குறைவதற்குக் காரணம்.

    பழைய ஹீரோயின்கள்:

    லலிதா, ராஹினி, பத்மினி, சரோஜாதேவி, பானுமதி, கே.ஆர்.விஜயா ஆகிய அனைவருமே வேறு மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.

    காரணம் என்ன? இதற்குப் பலரிடம் தெளிவான பதில்கள் இல்லை. ஏன் சினிமா உலகின் நெளிவு சுளிவுகள் தெரிந்த நடிகையான மனோரமாவிடம் கூடஇதற்குத் தெளிவான பதில் இல்லை. ஏன் இந்த நிலை?

    ஒரு நடிகைக்காக கோவில் கட்டத் துணிந்த தமிழ் நாட்டினர் தங்களது குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை சினிமாவில் நடிப்பதை அனுமதிப்பதில்லை. (சினிமா உலகைப்பற்றி விவரம் தெரிந்தவர்கள் நம்மூர்க்காரர்கள்)

    என்ன காரணம்?:

    திரைப்பட நடிகைகளின் வாழ்க்கை முறை, நாகரீகம் ஆகியவை மிகைப்படுத்தப்பட்டு பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளும் தமிழ் நாட்டுப் பெண்கள்சினிமாவில் நுழைவதைத் தடுக்கிறது. மேலும் அவர்கள் சினிமா என்ற பெயரில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு விடுவார்களோ என்ற பயமும்அவர்களிடம் உள்ளூர இருக்கிறது.

    மேலும் மும்பையிலிருந்து வரும் நாயகிகளின் பளீர் உஜாலா நிறம், சரளமான ஆங்கிலம், கூச்சமின்மை போன்றபழக்க வழக்கங்கள் நம்மூர் பெண்களிடம் மிஸ்ஸிங். மேலும் ஆடைக்குறைப்பு விஷயத்தில் தயாரிப்பாளர்கள்மற்றும் இயக்குநர்கள் சொல்வதற்கு டபுள் ஓ.கே. சொல்லும் சாதுர்யம் வெளியூர்காரர்களுக்குத் தான் அதிகம்.

    இந்த விஷயத்தில் அப்படியிப்படி அட்ஜஸ்ட் செய்து கொண்டு தமிழ் சினிமாவின் கவர்ச்சி நட்சத்திரமாகபட்டிதொட்டியெல்லாம் பேச வைத்தவர் குஷ்பு. மும்பையிலிருந்து சென்னை வந்த இந்த நாயகி கேரளா, ஆந்திராஎன்று எல்லா மாநிலத்திற்கும் சென்று தனது புகழை தக்க வைத்துக் கொண்டனர்.

    தன் தாய் சரசம்மாவின் முயற்சியால் அம்பிகா, ராதா ஆகியோர் தமிழ் சினிமா உலகுக்கு வந்தனர். ஊர்வசி அவரதுதங்கைகளும் வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்கள். இன்ஜியரான கவுதமி கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அவரதுஅம்மா ஒரு டாக்டர். அவர் அரசியலில் குதித்த பின் நன்கு பேசப்பட்டார்.

    ராணுவ அதிகாரியான தனது தந்தையுடன் கோடம்பாக்கம் வந்திறங்கியவர் ரேவதி. துறுதுறுப்பான நடிகை என்றுபேசப்பட்ட இவர் சுரேஷ்மேனனைத் திருமணம் செய்து கொள்ளும் வரை முன்னணி நடிகையாக இருந்தார்.

    வீட்டு நிலைமை, முன்னேறும் எண்ணம், சொகுசு வாழ்க்கை ஆகியவை கூட ஒரு பெண்ணை சினிமாத் துறைக்குள்நுழைய வைத்து விடுகின்றன. ஏனெனில் கோடிக்கணக்கில் பணம், புகழ் அனைத்தையுமே கொடுக்கிறது சினிமா.

    மும்பையில் திக்குத்தெரியாமல் இருந்த குஷ்பு இன்று கோடிக்கணக்கு சொத்துக்களுக்கு அதிபதி. நக்மாவோசென்னைக்கும், மும்பைக்கும் பறந்து, பறந்து படங்களில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். சென்னையில் சொந்தவீடு கட்டி விட்டார் லேட்டஸ்ட் நம்பர் ஒன் சிம்ரன். தேவயானியோ மொத்தமாக மும்பைக்கு குட்பை சொல்விட்டுசென்னையிலேயே செட்டிலாகி விட்டார்.

    ரோஜா ரோஜா:

    தெலுங்கு ரோஜாவோ சென்னை ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அவர் விரைவில் டைரக்டர்ஆர்.கே.செல்வமணியைக் திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டில் ஆக உள்ளார்.

    ரம்பா. இவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட். இவருக்குத் தற்போது சென்னையில் சொந்த பங்களா.வெளிநாட்டுக் கார்.

    மீனாவையும் தமிழ் பெண் என்று சொல்லி விட முடியாது. அவரது அம்மா கேரளத்துக்காரர். தமிழ் நாட்டிலுள்ளஅழகான பெண்கள் கூட சினிமாவில் நுழைய விரும்புவதேயில்லை. பஞ்சாபி மற்றும் கேரளப் பெண்கள்தான்சினிமாவில் சாதிக்க விரும்புகின்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X