»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்ள கமல்ஹாசனும் சிம்ரனும் ஒரே காரில் வந்தனர்.

கலையுலகப் போராட்டத்தில் அத்தனை பேரும் கண்கொத்திப் பாம்பாக கவனித்தது கமலும், சிம்ரனும் எப்படி வரப் போகிறார்கள் என்று தான்.அவர்கள் நினைப்பிற்கேற்ப இருவரும் ஒரே காரில் நெய்வேலி வந்து அசத்தினார்கள்.

சென்னையிலிருந்து தனது ஹூண்டாய் காரில் கிளம்பிய கமல், சிம்ரனையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். கலைஞர்களுக்காக கடலூர் பொறியியல் கல்லூரியில்உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரிக்கு கமல் கார் வந்தபோது புகைப்படக்காரர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் ரசிகர்கள் குவிந்து விட்டனர்.

ஆனால் காரில் இருந்து முதலில் கமல் மட்டுமே சூயிங் கம்மை மென்று கொண்டே இறங்கினார். இதனால் அனைவருக்கும் "சப்" என்று ஆகி விட்டது.

கொஞ்ச தூரம் நடந்து சென்ற கமல், பின்னர் காரைத் திரும்பிப் பார்த்து சிம்ரனை கூப்பிட்டார். உடனடியாக காரிலிருந்து இறங்கிய சிம்ரன், வேகமாக நடந்துகமல் அருகே வந்தார். அவரும் சூயிங் கம் மென்று கொண்டிருந்தார்.

இருவரையும் ஒன்றாகப் பார்த்ததும் அவர்களை ஜோடியாக "க்ளிக்" செய்ய புகைப்படக்காரர்கள் தயாராகினர். ஆனால் காவல்துறை அதிகாரிகள்உள்ளே புகுந்து தடுத்து விட்டனர். அப்புறம் பார்த்துக்கலாம் என்று போலீசார் கூறிக்கொண்டிருந்த போதே கமலும், சிம்ரனும் கல்லூரிக்குள் சென்றுவிட்டனர்.

அதேபோல் நெய்வேலியில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதும் பாதியிலேயே இருவரையும் காணவில்லை. கூட்டத்தில் கலைஞர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே இருவரும் திடீரென்று எஸ்கேப் ஆகி விட்டனர்.

ஆரத்தி எடுத்து அசத்திய விஜயகாந்த்:

அனைவரும் கருப்பு உடையில் இருக்க விஜய்காந்த் வழக்கமான தனது வெள்ளை வேட்டி, சட்டையில் இருந்தார். அவரை ஏதோபோருக்கு அனுப்புவது போல ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்தார் அவரது மனைவி பிரேமலதா.

விஜயகாந்த்தும் சும்மா இருக்கவில்லை. தனியாக ஒரு காரில் சென்று கொண்டிருந்த அவர் மாமண்டூரில் உள்ள தன்னுடையஎன்ஜீனியரிங் கல்லூரியில் காரை நிறுத்தினார்.

பின்னர் நெய்வேலிக்குச் செல்லும் அனைத்து நடிகர்-நடிகைகளுக்கும் விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதா மற்றும் மகன்பிரபாகரன் ஆகியோருடன் நின்று ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தார்.

மேலும் நடிகர்-நடிகைகளுக்காக கோக், பெப்ஸி, நொறுக்குத் தீனி என்றும் மூட்டை மூட்டையாகக் கொடுத்தனுப்பி அசத்தினார்விஜயகாந்த்.

போராட்டத்தில் கலைஞர்கள்:

எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்ற பாலிசி வைத்துள்ள அஜீத் அதை ஒதுக்கிவிட்டு ஒழுங்காகபோராட்டத்துக்கு வந்து சேர்ந்தார். அவருடன் மனைவி ஷாலினியும் வந்தார்.

பாரதிராஜாவும் வைரமுத்துவும் ஒரே காரில் வந்தனர். அதிமுகவை சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம் தனது வெள்ளை டீ சர்ட்டில்"வேண்டாம் ஏழையின் கண்ணீர், வேண்டும் காவிரியில் தண்ணீர்" என்று கொட்டை எழுத்துக்களில் பெயிண்டால்எழுதியிருந்தார்.

தனது வலுக்கையை மறைக்க தலையில் துண்டு கட்டியிருந்தார் பிரபு. கருப்பு டி-சர்ட், பேண்ட்டில் இருந்த மும்தாஜ் அதன் மீதுபர்தாவையும் போட்டிருந்தார். பின்னர் அதை கழற்றிவிட்டார்.

போராட்டம் நடக்கும் முறை குறித்து அவ்வப்போது லைவ் வாக திமுக தலைமைக்கு செல்போனில் தகவல் தந்து கொண்டிருந்தார்சரத்குமார்.

பாரதிராஜாவும் பாலசந்தரும் அடிக்கடி ஆலோசனை நடத்திக் கொண்டனர். பாரதிராஜா ஒரு துண்டைப் போட்டுக் கொண்டுமுன்னால் நடக்க, ஸ்டன்ட் நடிகர்கள் கூட்டத்தை விலக்கி அவருக்கு வழி ஏற்படுத்தித் தந்தனர்.

ஸ்டண்ட் நடிகர்கள் ஊர்வலத்தில் தாரை, தப்பட்டை அடித்துக் கொண்டு டான்ஸ் ஆடியபடி வந்தனர். அவ்வப்போது அசால்டாகஅந்தரத்தில் 4 பல்டி அடித்து தரையில் இறங்கினர். இதைப் பார்த்த அசந்த பொது மக்கள் மாலைகளை அவர்கள் மீது வீசினர்.

நடிகர், நடிகைகளுக்காக ஏ.சி. செய்யப்பட்ட 3 மேக் அப் வாகனங்களும் நெய்வேலி கொண்டு வரப்பட்டன. ஆனால், அதையாரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. 2 லாரிகள் நிறைய 10,000 மினரல் வாட்டர் பாட்டில்களும் கொண்டு வரப்பட்டன.

டிட் பிட்ஸ்:

  • பேரணி துவங்க 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆங்கிலப் பத்திரிக்கையில் கருணாநதி குறித்து பாரதிராஜா கொடுத்த கடுமையான பேட்டி காரணமாக அப்செட் ஆன சரத்குமார், பேரணியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று நெய்வேலி வந்ததும் விஜயகாந்த்திடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜயகாந்த், அவரையும், நெப்போலியனையும் பிரயத்தனம் செய்து சமதானப்படுத்தியுள்ளார். அதன் பிறகே அவர் பேரணியில் வரச் சம்மதித்தார். ஆனால் பேரணியில் ஊர்வலமாக வராமல் சரத்தும், நெப்போலியனும் தனியாகவே வந்தார்கள்.
  • நடிகர்கள் தாமதம் செய்து கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த பாரதிராஜா, தானே தனியாக நடக்கத் தொடங்கினார். இதைப் பார்த்ததும் மற்ற கலைஞர்களும் நடக்கத் தொடங்கவே விஜயகாந்த் இல்லாமலேயே ஊர்வலம் தொடங்கி விட்டது. கடைசியாக வந்த அணியில் தான் விஜயகாந்த் இருந்தார்.
  • ஊர்வலப் பாதையின் இரு மருங்கிலும் திரண்டிருந்த ரசிகர்கள் கலைஞர்களைப் பார்த்து போட்ட கூச்சலால் நெய்வேலியே அதிர்ந்து போயிருக்கும். இதுவரை நெய்வேலியில் இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்ட பேரணி என்று கூறுகிறார்கள்.
  • பொதுக் கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இந்தியில் பேசியது அத்தனை பேரையும் கவர்ந்தது.
  • கவர்ச்சி நடிகை மும்தாஜும், அவருக்குப் போட்டியாக களம் இறக்கப்பட்டுள்ள கும்தாஜும், அருகருகே நின்று கொண்டிருந்தனர். ஆனால்ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பிக் கொண்டிருந்தார்கள். காயத்ரி ரகுராமின் தலையை கோதியவாறும், கன்னத்தைக் கிள்ளியவாறும் மும்தாஜ் கொஞ்சிக் கொண்டிருந்தது ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா சந்தோஷம்.
  • திரையுலக கலைஞர்களுக்கு மேடையில் அமர்ந்திருந்த மதுரை ஆதீனம், வலியக் கூப்பிட்டு ஆசிர்வாதம் வழங்கி அனுப்பினார். வடிவேலு மட்டும் தான் பின் பக்கத்திலிருந்து அவரைக் கூப்பிட்டு ஆசிர்வாதம் பெற்றார்.
  • ராஜூ சுந்தரம் குழுவைச் சேர்ந்த நடனக் குழுவினருக்கும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
  • அத்தனை கலைஞர்களும் கருப்பு ஆடையில் வந்தனர். ஆனால் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் மட்டும் பளிச் வெள்ளை ஆடையில் வந்தார்.
  • நடிகர் எஸ்.எஸ். சந்திரன் பேசும் போது அத்தனை பேரும் நெளிய ஆரம்பித்தார்கள். அவரது பேச்சில் அத்தனை அம்மா வாசம்.
  • கலைஞர்கள் கூட்டத்தைப் பார்க்க நெய்வேலியில் திரண்டிருந்த கூட்டம், இதுவரை திரையுலகினர் சந்தித்திராத பிரமாண்டமான கூட்டம் என்று திரையுலகினர் பெருமையாகக் கூறிக் கொண்டார்கள்.
Please Wait while comments are loading...