»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் எச்சரிக்கை மற்றும் மிரட்டல் தமிழ் படத் தயாரிப்பாளர்களை கொஞ்சம் கூடஅசைக்கவில்லை என்றே தெரிகிறது.

திருமாவளவனும், தமிழ்குடிதாங்கி என்று திருமாவளவானால் அழைக்கப்பட்டும் இராமதாசும் சேர்ந்துபடங்களுக்கு தமிழ்த் தலைப்புகளை வைக்கச் சொல்லி தொண்டை தண்ணி வத்த மேடைகளில் முழக்கமிட்டுக்கொண்டிருந்தாலும் தயாரிப்பாளர்கள் அதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.

சேரன் மட்டுமே பெயரை டூரிங் டாக்கீஸ் தலைப்பை தமிழுக்கு மாற்றியுள்ளார்.

மற்றவர்கள் யாரும் குடிதாங்கி என்ன இடிதாங்கிக்கே பயப்பட மாட்டார்கள் போலிருக்கிறது.

கடந்த 2 மாதங்களில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில்பதிவு செய்யப்பட்டுள்ள படங்களின் தலைப்புகளில் 35 பெயர்கள் ஆங்கிலப் பெயர்கள் தான்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் கடந்த 2மாதங்களில் மட்டும் 28 ஆங்கில படப் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனவாம்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் 7 ஆங்கில படப் பெயர்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் பல பெயர்கள் படு வித்தியாசமானவை.

வெல்கம் டூ கோடம்பாக்கம், கிளைமாக்ஸ் (ஏதோ மலையாள சீன் பட தலைப்பு மாதிரி இருக்கிறது), மிசா, டீல்,நியூஸ் டுடே (ஹீரோ பத்திரிக்கை ரிப்போர்டரோ என்னவோ), ரைட், பேர் அன்ட் லவ்லி, ஏ-1, பப்ளிக், நியூஇந்தியா, அடிச்சாண்டா ஜாக்பாட்! (சத்தியமா, இது பதிவு செய்யப்பட்டுள்ள சினிமா பெயர் தாங்க!).

டயல் 100 (விஜய்காந்த் போலீஸ் ரோல் செய்ய நல்ல தலைப்பு), ஸ்ட்ராங்க், தி சிட்டி, என். எச்-4, ராணுவ ஏஜென்ட்007, ஜெராக்ஸ், பிளவர் பஜார், ரெயின், டைவர்ஸ், ரா...

இப்படிப் போகின்றன பதிவாகியுள்ள படங்களின் பெயர்கள்.

இவற்றில் சில டப்பிங் படங்கள் என்று தெரிகிறது.

மற்றவை அனைத்துமே தமிழிலேயே தயாரிக்கப்படும் ஒரிஜினல் தமிழ் படங்கள் தான்.

கடந்த ஆண்டு மொத்தம் 520 படங்கள் வரை தமிழ் திரையுலகில் பூஜை போடப்பட்டது. இதில் 89 படங்களுக்குஆங்கில டைட்டில்கள் தான் வைக்கப்பட்டன.

ஆனால் படங்கள் வெளியானபோது 12 படங்களுக்கு மட்டுமே ஆங்கிலத்தில் பெயர் இருந்தது. மற்றவை தமிழில்மாற்றப்பட்டு விட்டன. இவற்றிலும் ஒரு சில படங்கள் மட்டுமே ஓடின. மற்றவை படுத்து விட்டன.

கமல் ஒரு பக்கம் மும்பை எக்ஸ்பிரஸை ஓட்ட, எஸ்ஜே சூர்யா இன்னொரு பக்கம் பி.எஃப் படத்தை எடுத்துக்கொண்டிருக்க, இடையில் திருமா-நெடுமாறன்-ராமதாஸ்-சேதுராமன் ஆகியோர் எதிர்ப்புக் குரல் கொடுக்க, அதைஎதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வாய்ஸ் கொடுக்க, என்ன நடந்தா எங்களுக்கென்ன என்று ஆங்கிலத்தில்பெயர்களை சூட்டிவிட்டு தயாரிப்பு பார்ட்டிகள் தங்கள் வேலைகளில் பிஸி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil