»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீனாவில் "நீ இல்லை என்றால்....." பாட்டை முணுமுணுக்காதவர்கள் வெகு சிலரே.

பிரபலமான அந்த வெற்றிப்பாடலைப் பாடியவர் முருகன். இசைக்கு இவர் புதியவரல்லர். பின்னணிப் பாடகிஅனுராதா ஸ்ரீராமின் தம்பிதான் முருகன்.

காரைக்குடி மணியிடம் பயிற்சி பெற்ற முருகனுக்கு டிரம்ஸ் வாசிப்பது என்றால் உயிர். ஜாஸ் இசை படிப்பதற்காகபெர்க்லி யுனிவர்சிட்டிக்குச் சென்றவர்.

அங்கிருந்து தாய்நாடு திரும்பியவர், முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்திலேயே உழன்று கொண்டிருந்தார்.

ஏற்கனவே இளையராஜா, தேவா, யுவன் சங்கர் ராஜா, பரத்வாஜ், கார்த்திக் ராஜா ஆகியோர் இசையில்பாடியிருக்கிறார். மணிசர்மா-பர்வீன் மணியின் "லிட்டில் ஜான்" படத்திலும் பாடியிருக்கிறார் முருகன்.

அதே போல இன்னொரு இளம் பாடகரும் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறார். "கண்டுகொண்டேன்கண்டுகொண்டேன்" படத்தில் வரும் "ஷ்மாயி....." பாடலைப் பாடி புகழ் பெற்றவர் தேவன். "மின்னலே","ஃப்ரெண்ட்ஸ்" படங்கள் உள்பட 50 பாடல்களை விறுவிறுவென பாடி முடித்துவிட்டார்.

ரெஹ்மானின் "ஸ்டார்", ஹாரீஸ் ஜெயராஜின் "மஜ்னு", பூவெல்லாம் உன் வாசம், சாக்லேட் போன்ற படங்களில்தற்போது பாடியுள்ளார்.

ரெஹ்மானுடன் கடந்த ஆண்டு டூர் அடித்தது நல்ல அனுபவம் என்று கூறும் தேவன் பல நடிகர்களுக்குப்பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். லேட்டஸ்டாக "லிட்டில் ஜான்"-ல் பென்ட்லி மிட்சுமுக்குக் குரல்கொடுத்திருக்கிறார்.

ஹரிஹரன், சங்கர் மகாதேவன் என தமிழுக்கு கொஞ்ச காலமாகவே நல்ல பின்னணிப் பாடர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். புதிதாய் சேர்ந்திருக்கும் இந்த இளைஞர்களையும் வாழ்த்துவோம்.

செக்ஸ் தெராபி தரும் காமாக்னி

"வாஸ்தவ்" இந்திப் படத்தில் ஆடிய கஷ்மிரா ஷாவை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அரைகுறை ஆடைப் படங்களை எடுப்பதில் வல்லவரான கேமராமேன்-டைரக்டர் அசோக்குமாரை வைத்துப்படமெடுத்த ஜெகதீஸ்வர ரெட்டியின் இயக்கத்தில் "காமாக்னி" படத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்கஷ்மிரா.

வழக்கம் போல சென்சார் போர்டு கத்தரி வைக்கப் போகும் கதைதான் "காமாக்னி"யின் கதையும்.

போலீசிடம் பிடிபடும் ஒரு தீவிரவாதி "கோமா" ஸ்டேஜில் இருக்கிறான். அவனுக்கு எவ்வளவோ சிகிச்சைகளைஅளித்துப் பார்க்கிறார்கள் டாக்டர்கள். பலனில்லாமல் போகவே, ஒரு நர்ஸ் மூலமாக செக்ஸ் தெரப்பியைப்பயன்படுத்துகிறார்கள்.

இதுதான் படத்தின் கதை. செம சூடான கதை. என்ன மாதிரியெல்லாம் நம்ம ஆட்கள் யோசிக்கிறார்கள்பார்த்தீர்களா?.

இந்தப் படத்தின் மீது சென்சார் போர்டு கை வைக்காமலா போகும்? கஷ்மிராதான் இதில் நர்ஸாக நடிக்கிறார்.படத்தை பார்த்துவிட்டு மருத்துவமனைகளில் போய் யாரும் செக்ஸ் தெராபி கொடுங்க, டாக்டர் என்று கேட்காமல்இருந்தால் சரி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil