»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

2001-ம் ஆண்டு கலையுலகில் பல திடுக் திருமணங்கள் நடந்த ஆண்டு.

தேவயானியும், டைரக்டர் ராஜகுமாரனும் செய்து கொண்ட திடீர் திருமணம்தான் அனைவரையும் பரபரப்பில்ஆழ்த்திய திருமணம்.

இவர்கள் தவிர காமடி நடிகர் வையாபுரிக்கு அவரது கலையுலக நண்பர்கள் பெண் பார்த்து நடத்தி வைத்ததிருமணமும் பெரிதாக பேசப்பட்டது.

அவர்களுக்கு அடுத்து பரபரப்பானது கவர்ச்சி நடிகை அல்போன்சாவுக்கு நடந்த திருமணம்தான். சினிமாஸ்டைலில் வில்லனிடமிருந்து காப்பாற்றிய ஹோட்டல் ஊழியரையே கைபிடித்தார்.

அதேபோல, நடிகை விசித்திரா, ஹரிதா ஆகியோரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்கள்.

பாடகர்கள் திப்புவும், ஹரிணியும் காதல் மணம் புரிந்தார்கள். முதல் படத்திலேயே பேசப்பட்ட டும் டும் டும்டைரக்டர் அழகம் பெருமாளும் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil