»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

கமலஹாசனின் சைக்கோ திரில்லர் ஆளவந்தான், அஜீத்தின் சிட்டிசன், விக்ரமின் காசி என வித்தியாச முயற்சிகள்.தில், பிரண்ட்ஸ் என சூப்பர் ஹிட்கள், மின்னலே போன்ற மியூசிக்கல் சூப்பர் டூப்பர் ஹிட்களைக் கொடுத்த ஆண்டு2001.

யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் என புதிய இசைக் காற்று பலமாக வீசத் தொடங்கிய ஆண்டு.லிங்குசாமி (ஆனந்தம்), அழகம்பெருமாள் (டும் டும் டும்), ஷரவண சுப்பையா (சிட்டிசன்), ஜீவா (12பி), முருகதாஸ்(தீனா), திருப்பதிசாமி (நரசிம்மா), கெளதம் (மின்னலே) என தமிழ்த் திரையுலகிற்கு சில நல்ல டைரக்டர்கள்கிடைத்த ஆண்டு.

ஸ்னேகா, மோனல், ஜெயாரே, விஜயலட்சுமி, பூமிகா, ஷமிதா, அஞ்சலா சவேரி, காயத்ரி ஜெயராம், ரீமா சென்,காவ்யா மாதவன் என ஒரு ரோஜாக் கூட்டம் கதாநாயகியர்களாக கிடைத்த ஆண்டு.

விஜய், அஜீத், மாதவன், பிரசாந்த்க்கு வயிற்றைக் கலக்க வைக்க ஷாம் எனும் புது ஹீரோ வந்த ஆண்டு.

இப்படி, பல நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகலாம். 2001ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் சாதனைபடைத்தவர்கள் குறித்த ஒரு அலசல் ...

அதிக படங்களில் நடித்த ஹீரோக்கள்: முரளி (6), பிரசாந்த், பிரபு, விக்ரம், மாதவன், சரத்குமார், சத்யராஜ் (தலா4), விஜய், அஜீத், விஜயகாந்த், கார்த்திக் (தலா 3), கமல் (2).

அதிக படங்களில் நடித்த நடிகைகள்ய/ஹீரோயின்கள்: ரோஜா (10), மும்தாஜ், தேவயானி (தலா 6), ஜோதிகா (5), லைலா(4).

கிராபிக்ஸ் காட்சிகளை படு வித்தியாசமாக கையாண்ட படம் ஆளவந்தான்.

கண் பார்வையற்றவராக தத்ரூபமாக விழிகளை வருத்திக் கொண்டு காசி படத்திற்காக நடித்தார் விக்ரம்.

2000-மாவது ஆண்டை விட அதிக படங்கள் கடந்த ஆண்டு வெள்ளி விழாக் கண்டன. பல படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடின.

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குட்டி என்ற படம் வர்த்தக ரீதியில் பெரும் வெற்றியைப் பெற்று சாதனைபடைத்தது. இந்தப் படத்திற்காக இளையராஜா, இலவசமாக இசையமைத்துக் கொடுத்தார்.

தெலுங்குத் திரையுலகில் பிரபல டைரக்டராக திகழ்ந்த தமிழரான திருப்பதி சாமி, தனது முதல் தமிழ்ப் படமான நரசிம்மா வெளியாகும் முன்பே அகாலமரணமடைந்தார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil