»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

"டிஸ்கோ டான்ஸர்", "பாடும் வானம்பாடி", "எனக்குள் ஒருவன்" படங்களின் வரிசையில், நடனத்தை அடிப்படையாகக் கொண்டு லாரன்ஸ் ராகவேந்தர் நடிக்கும் "ஸ்பீட் டான்சர்" படம் உருவாகிறது. தெலுங்கில் உருவான படம் தான் அதே பெயரில் தமிழுக்கு மொழி மாற்றமாகிறது.

அருண்பாண்டியன் சொந்தமாக தயாரித்து, இயக்கியுள்ள தேவன் படத்தில் முதலில் கெஸ்ட் ரோலில் தான் விஜயகாந்த் புக் செய்யப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் படம் முழுவதும் வருவது மாதிரி மாற்றிவிட்டார்கள். ஆனால் அருண்பாண்டியன் ஆங்காங்கே தான் இப்படத்தில் வருகிறார்.

ஷாம் நடித்து வரும் "கண்மணி நீ வரக் காத்திருந்தேன்" படத்தின் பெயர் "லேசா லேசா" என்று மாற்றி விட்டார்கள். படத்தில் வரும் ஒரு பாடலின் துவக்க வரி தான் படத்தின் பெயராக மாறியுள்ளதாம். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர் மிஸ் மெட்ராஸாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிலில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ள கன்னட நடிகர் சரண் ராஜ் இனிமேல் வில்லனாக நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். குணச்சித்திர ரோல்கள், முடிந்தால் ஹீரோ ரோல்களில் மட்டுமே இனிமேல் நடிப்பாராம் (யார் பார்ப்பது?).

நடிகர் ரஜினிகாந்த் இளம் வயதில் பெங்களூரில் இருந்தபோது "சம்யுக்த கர்நாடகா" என்ற கன்னட நாளிதழில் சுமார் 7 மாத காலம் புரூப் ரீடராக பணியாற்றியுள்ளார்.

அபிராமி இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டாராம். நிரந்தரமாக மலையாளத் திரையுலகுக்கு திரும்பி விட்டார். ஆனால் இன்னும் ஒரு படத்திலும் புக் ஆகவில்லையாம்.

கால் ஊனமுற்றவராக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் விக்ரமை அணுகியுள்ளார். கொஞ்ச நாளைக்கு எந்தக் "குறையும்" இல்லாமல் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இரண்டு ஆண்டுகள் கழித்து வாருங்கள் பார்க்கலாம் என்று கூறி அவரை அனுப்பி விட்டாராம் விக்ரம்.

இப்போதெல்லாம் மாதவன் தினசரி யோகா செய்து வருகிறார். உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுவதால் யோகா செய்வதாக கூறுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil