»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வர்ச்சிப் புயல் மும்தாஜ் சென்னையில் ஆடம்பரமான வீடு கட்டி வருகிறார். இனிமேல் இங்கேயே செட்டிலாகப் போவதாகவும் கூறி வருகிறார்.

இதற்கிடையே டி. ராஜேந்தரின் மகன் சிலம்பரசன் ஹீரோவாக அறிமுகமாகும் "காதல் அழிவதில்லை" படத்தில் மும்தாஜின் டான்ஸ் ஒன்றைவைக்கலாமா என்று டி.ஆர். தீவிரமாக யோசித்து வருகிறாராம்.

சைதாப்பேட்டை புது எம்.எல்.ஏ. ராதாரவி பேசிய பல அம்மா ஆதரவு வசனங்களுக்கு முதலில் ஓ.கே. "பாபா" பின்னர் கட் பண்ணச் சொல்லிவிட்டாராம். இப்போது படத்தில் அந்த வசனங்கள் இடம் பெறாதாம்.

"கதாநாயகி" என்ற படத்தில் துபாயைச் சேர்ந்த பிரேம் மனோஜ் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். துபாயில் எடுக்கப்படும் பாடல்காட்சிகளுக்குரிய செலவுகளை அவரே ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளாராம். அட!

ூட்டிங்குகளில் இப்போதெல்லாம் சிம்ரனை அமைதியான முகத்துடனேயே பார்க்க முடிகிறதாம். பழைய சிம்ரனிடம் இருந்து துறுதுறுப்பு இப்போதுமிஸ்ஸிங்காம். என்ன ஆச்சு சிம்ரன் மிஸ்?

மீபத்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்ற நடிகர் விவேக்கை அந்நாட்டு தமிழ் அமைச்சர் டத்தோ சாமிவேலு தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிருந்து வைத்து அமர்க்களப்படுத்தி அனுப்பினாராம். நெகிழ்ந்து போய் இருக்கிறார் விவேக்.

"பூெவல்லாம் உன் வாசம்" படத்தில் அஜீத்-ஜோதிகா இடையே குழப்பம் ஏற்படுத்தி, வில்லத்தனம் செய்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின்மகன் யுகேந்திரன் அடுத்த விஜய் படமான "யூத்"தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் பிரதான வில்லனே யுகேந்திரன் தானாம். படுவித்தியாசமான கேரக்டராம் அது.

டிகை அபிராமிக்கு ஏன் அதிக படங்கள் வருவதில்லை? இந்த முக்கியமான (?) ஆராய்ச்சியின் போது ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது. ஷூட்டிங்குக்குஅபியுடன் அவரது அப்பாவும் கூடவே வருகிறாராம். இதனால் கிடைக்கிற கேப்பில் பேசலாம் என்று நினைப்பவர்கள் அபியை அணுக முடியாமல்அவதிப்படுகிறார்களாம்.

அபியை நினைத்தாலே அவருடைய அப்பா தான் நினைவுக்கு வருகிறார் என்று புலம்பும் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் மற்றும் ஹீரோக்கள் அபியை புக்செய்ய ரொம்பவே யோசிக்கிறார்களாம். அப்பாவைக் கழற்றி விட்டால்தான் அபி இங்கு தேற முடியும் என்று அங்கலாய்க்கிறார்கள் அவர்கள். அடப்பாவமே!

"இவன்" படத்தில் மீனாவுடன் பல நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளாராம் பார்த்திபன். மீண்டும் மார்க்கெட்டைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரேஆசையில் பார்த்திபன் சொன்னபடியெல்லாம் நடித்துள்ளாராம் மீனா.

பார்த்திபன் அலுவலகத்தில் ஒரு முக்கியப் "பிரமுகரை" அடிக்கடி காண நேரிடுகிறது. அந்தப் "பிரமுகரும்" சீதா-பார்த்திபனின் மகன் ராக்கியும் குளோஸ்பிரண்டாகி விட்டார்களாம்.

அவர் இல்லை என்றால் இவர் டல்லாகி விடுவாராம். இவர் இல்லையென்றால் அவர் முகம் சோர்ந்து விடுமாம்.

யார் அந்தப் "பிரமுகர்" என்று அறிய ஆவலா? வேறு யாருமல்ல, நளினியின் மகன் அருண் தான் அந்த வி.ஐ.பி. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

டிகை விநோதினி பிரபல தொழில் அதிபரின் அன்பு மழையில் நனைந்து வருகிறார் என்ற வதந்தி ரொம்ப நாளாகவே கோடம்பாக்கத்தில் உலவிவருகிறது.

சமீபத்தில் விநிாேதினி வீட்டில் ஒரு பார்ட்டி நடந்தது. விருந்துக்கு வந்தவர்கள் உற்சாகத்தில் உளறியது வீட்டைத் தாண்டி தெருவுக்கும் கேட்டதாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முகத்தைச் சுளித்துக் கொண்டு அமைதி காத்தார்களாம். விருந்து முடிய நள்ளிரவைத் தாண்டியதாம்.

டிகர் விக்ரமும், பிரஷாந்த்தும் சொந்தக் காரர்கள். அதாவது பங்காளிகள். எப்படி? இரண்டு பேருடைய அம்மாக்களும் உடன் பிறந்த சகோதரிகள்.அதேபோல, நடிகை ரவீனா டான்டனும், ஜெமினி புகழ் கிரணும் நெருங்கிய சொந்தக்காரர்களாம்.

கோடி சம்பளம் கொடுக்கும் படங்களை மட்டுமே இப்போது விக்ரம் ஒப்புக் கொள்கிறாராம். பார்த்து நைனா, ஐ.டி. ஆளுங்க வரப் போறாங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil