»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீபாவளிக்கு வந்த படங்களில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட படமான அஜீத்தின் ஆஞ்சநேயா அட்டர்பிளாப்பை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் மிகச் சுமாரான படமாகக் கூறப்பட்ட விஜய்யின் திருமலை, பரவாயில்லை என்ற ரகத்தைத்தொட்டு, கலெக்ஷனிலும் வினியோகஸ்தர்களில் வயிற்றில் பாலை வார்த்து வருகிறது.

பாலா-விக்ரம்-சூர்யா கூட்டணியின் பிதாமகன் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது. படத்தைப் பார்த்துவிட்டுதிரும்புகிறவர்கள் தங்களுக்கே ஏதோ ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிட்ட மனோபவத்துடன் தான் வருகிறார்கள். அந்தஅளவுக்கு படம் மனதைத் தைத்து, வலிக்க வைத்து, கண்களில் ஈரம் நிரப்பிவிடுகிறது.

வெட்டியான் கேரக்டரில் வரும் விக்ரம், ஒரு ஆதிகால மனித உருவில் நடமாடும் மிருகம் மாதிரி வாழ்ந்துகாட்டியுள்ளார். விரைத்துப் போன உருவம், எதற்கும் கலங்காத ராட்சசன். பிணங்ளோடு வாழ்ந்து, வாழ்ந்துஉயிர்களின் அருமை தெரியாத அந்த மனிதன் ஒரு நாள் உடைந்து போய் அழுகிறான். அவன் அழுகைக்குகாரணம் ஒரு பிணம். அந்தப் பிணம் சூர்யாவின் உடல்.

சூர்யா பிணமாவது ஏன், அவன் மறைவுக்கு வெட்டியான் அழுவது ஏன் என்பதைத் தான் கதையாகவடித்திருக்கிறார் பாலா. அட்டகாசம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாய் பிதாமகனைச் சொல்லலாம்.

வசூல் பிய்த்துக் கொண்டு போவதால், முதலில் ஆர்ட் பிலிம் என்று பேச்சால் மிரண்டு போயிருந்த பாலாவுக்குள்உற்சாகம் குடிகொண்டுவிட்டது. படத்துக்கு ரூ. 1 கோடி வரை பைனான்ஸ் செய்த விக்ரமோ பெரும் மகிழ்ச்சியில்இருக்கிறார். நடிப்புக்கு மிக நல்ல பெயர் கிடைத்துள்ளதோடு, போட்ட காசும் பல மடங்காக திரும்பி வரும்மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

இந்தப் படத்துக்கு அப்படியே உல்டாவான கரம் மசாலா படம் ஆஞ்சநேயா. 15 ஆண்டுகளுக்கு முன் விஜய்காந்த்போலீஸ் வேடம் கட்டி நடித்த பல அப்பட்டமான ஆக்ஷன் படங்களின் சாயல் கொண்ட படம் இது.

கதைகளிலும், கதை சொல்வதிலும் தமிழ் சினிமா புதிய காலகட்டத்தில் நுழைந்திருக்கிற காலத்தில் போய் அர்தப்பழசான போலீஸ்- விஐபி மோதலை கொட்டாவி விட்டு, விட்டு வாய் கிழிந்துவிடும் அளவுக்கு இழுத்தடித்துசொல்லியிருக்கிறார்கள்.

மகாராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தை வைத்துக் கொண்டு, அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு இந்தப் படம்மூலம் அப்ளிகேஷன் போடுகிறேன் என்று அஜீத் எப்படி பேசுகிறார் என்று புரியவே இல்லை.

படம் முடிந்து திரும்பும்போது, பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் மீரா ஜாஸ்மீனைக் காணவில்லை என்று புகார்கொடுத்துவிட்டு வரலாம். படத்தில் திடீர், திடீர் என்று வந்து மறையும் மீரா, கடைசியில் எங்கே போனார் என்றேதெரியவில்லை.

பிட், பிட்டாய் ஒட்டி சரவெடி கோர்த்திருக்கிறார்கள். ஆனால், உள்ளே மருந்து இல்லாததால் எவ்வளவு தீவைத்தாலும் பற்றிக் கொள்ள மறுக்கிறது. படம் மகா மோசம். வசூல் படுக்க ஆரம்பித்துவிட்டது. இதை எப்படி ரூ.11 கோடிக்கு விற்றார்கள் என்று தெரியவில்லை,

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அஜீத்.

திருமலையைப் பொறுத்தவரை அங்கிட்டும் இல்லை , இங்கிட்டும் இல்லை ரகம். பைட்டு , பாட்டு, டான்சு எனவிஜய்யின் மினிமம் கியாரண்டி படம். ரசிகர்களுக்குப் பிடித்துள்ளதால் தியேட்டர்களில் விசில் பறக்கிறது.

கூட்டம் வருவதால் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் போட்ட காசை எடுத்துவிடலாம் என்றநம்பிக்கையில் இருக்கிறார்கள்.

அர்ஜூன் நடித்து ஒற்றன் என்று ஒரு படம் வந்திருக்கிறது. அர்ஜூனின் ஆக்ஷன், நன்றாக இருக்கிறது என்றுநினைத்து அவர் ஆடும் டான்ஸ், சிம்ரனின் பிரசன்ஸ் தவிர ஒற்றனில் வேறொன்றுமில்லை.

2003ம் ஆண்டு தீபாவளிக்கு வந்த படங்களில் இதுவும் ஒன்று என சினிமா புள்ளிவிவரக் கணக்குக்குவேண்டுமானால் தேறும். லோ பட்ஜெட் என்பதால் முதலுக்கும் மோசமில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil