»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் சும்மா இந்தியா வந்தேன். அப்படியே ஒரு சினிமாலே தலை காட்டினேன். தொடர்ந்து நடிக்கும் திட்டமெல்லாம் இல்லை என்று கதைவிட்ட நதியா இப்போது இங்கேயே தங்கி வாய்ப்பு வேட்டையாடி வருகிறார்.

நீண்ட காலத்துக்குப் பின் லண்டனில் இருந்து திரும்பி வந்து எம்.குமரன், சன் ஆப் மகாலெட்சுமியில் நடித்தார் நதியா. அப்போது அவர்விட்ட டயலாக் தான் நாம் முதல் பாராவில் சொன்னது.

ஆனால், மகாலெட்சுமியைத் தொடர்ந்து அவரிடம் கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர்கள் வரிசை கட்ட, ஊருக்கு திரும்பிவிடும் எண்ணத்தைஅப்படியே விட்டுவிட்டு அட்வான்ஸை வாங்கி குவிக்க ஆரம்பித்துவிட்டார். அத்தோடு முடிந்த வரை பெரிய பேனர்களில்வாய்ப்புக்களையும் தேடுகிறார்.

இவரை புக் செய்யப் போன பல தயாரிப்பளர்கள் அவர் கேட்ட சம்பளத்தைக் கேட்டு ஆடிப் போய் திரும்பியிருக்கிறார்கள்.

நான் பணத்துக்காக நடிக்க வரலை. இதனால ரூ. 15 லட்சம் மட்டும் கொடுங்க போதும் என்று பெரிய மனசோடு நதியா பேச, என்னாதுஅம்மா கேரக்டருக்கு இவ்வளவு பணமா என்று நொந்தபடி தப தபவென திரும்பி ஓடி வருகிறார்கள்.

நதியாவை அம்மன் வேஷத்தில் நடிக்க வைக்கப் போன ஒரு தயாரிப்பாளரிடம் 15 லகரம் கேட்க, என் படத்துக்கு பட்ஜெட்டேஅவ்வளவுதாம்மா என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

ஆனாலும் நதியா கேட்ட தொகையைத் தந்து புக் செய்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அந்த வகையில் சத்யராஜூக்குஜோடியாக ஒரு படத்தில் நடிக்க நதியா ஒப்பந்தமாகியுள்ளார்.

அதேபோல் சலபதி என்பவரின் கதை-வசனத்தில் ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் நதியா. படத்தை பாசில்இயக்குவாராம்.

இதற்கிடையே தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து அம்மா வேடம் எல்லாம் போட மாட்டேன். படையப்பாவில் ரம்யாகிருஷ்ணனுக்கு கிடைத்த ரோல் மாதிரி ஏதாவது இருந்தால் சொல்லுங்க என்கிறாராம் நதியா.

இதுவரை அம்மா, அக்கா, அண்ணி போன்ற கேரக்டர் ரோல்களில் நடிக்க அதிக பணம் வாங்கும் நடிகைகளில் இதுவரை முதலிடத்தில்இருந்தவர் சீதா தான்.

தெலுங்கில் ஏராளமான படங்களில் அம்மா ரோல் செய்த இவர் படத்துக்கு ரூ. 10 லட்சம் வாங்குகிறார். தமிழில் ரூ. 8 லட்சம் வாங்குகிறார்.இவரை தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் நதியா.

சீதாவுக்கு தமிழில் நதியா ரூபத்தில் என்றால் தெலுங்கில் பாத்திமா பாபு உருவத்தில் போட்டி உருவாகிவிட்டது. ரேட்டை கடுமையாகக்குறைத்துக் கொண்டு அங்கு அம்மா வேடங்களை எல்லாம் சீதாவிடம் இருந்து தட்டிப் பறிக்கிறாராம் பாத்திமா பாபு.

இதற்கிடையே சீதா, பானுப்பிரியா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று முன்னாள் ஹீரோயின்களும் அந்த நெனப்பு என்ற படத்தில் நடித்துவருகிறார்கள்.

இவர்களுக்குப் போட்டியாக ரூபிணியும் கோடம்பாக்கத்தில் என்ன ரோல் கொடுத்தாலும் சரி என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்.ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என்று 3 வாரத்துக்கு முன் வரை சொல்லித் திரிந்தவரிடம், கோலிவுட் கண்டுகொள்ளதாதால் இந்தப்பெரும் மாற்றமாம்.

சத்யராஜ் மட்டுமே இவரை தனது பெருமாள்சாமி என்ற படத்தில் ஹீரோயினாக்கியிருக்கிறார். மற்றவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil