»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  • கேரள மாநிலம் கன்னனூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய பிரம்மாண்டமான ஈராக் எதிர்ப்புப் பேரணியில் கமல்ஹாசனும்பங்கேற்றார்.
  • தெனாலி படம் இந்தியில் தயாராக உள்ளதாம். அதில் தமிழில் ஜெயராம் நடித்த கேரக்டரில் கமல்நடிக்கவுள்ளாராம். அப்போ கமல் ரோலில்? ஷாருக்கான் நடிக்கப் போகிறார். அவரே படத்தையும்தயாரிக்கிறாராம்.
  • மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ள "லேசா லேசா" படம் மலையாளத்தில் வந்து வெற்றிகரமாக ஓடிய "சம்மர் இன்பெத்லஹேம்" என்ற படத்தின் தமிழ் பதிப்பாம்.
  • "காந்தி", "ஹிட் அண்ட் டஸ்ட்" போன்ற புகழ்பெற்ற ஆங்கிலப் படங்களில் உதவி இயக்குநராக இருந்த எம்.வி. கோபால் ராவ்,தமிழில் "பாபி" என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். கதை, திரைக்கதையும் அவரே. தமிழ்ப் புத்தாண்டுக்கு "ரிலீஸ்" ஆகிறது இந்தப்படம்.
  • சமீபத்தில் ஊத்திக் கொண்ட "பாப்கார்ன்" படத்தைத் தொடர்ந்து "ஏறுமுகம்" என்ற படத்தில் மோகன்லால் ஹீரோவாகநடிக்கிறார். கிரண், மும்தாஜ் கதாநாயகிகளாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil