»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

வழக்கம் போலவே வடிவேலுவும், விவேக்கும் 2003லும் சூப்பர் காமெடியன்களாக திகழ்ந்தார்கள்.

வின்னர் படத்தில் வடிவேலு செய்த அட்டகாச காமெடி அத்தனை பேராலும் ரசிக்கப்பட்டது. படம் கொஞ்ச நாட்களாவதுதியேட்டர்களில் ஒட வடிவேலுவின் காமெடி பெரிதும் உதவியது.

அதேபோல, ஒற்றனில் வடிவேலு செய்த அலும்பு படத்தை தூக்கி நிறுத்தியது. பார்த்திபனுடன் ஜோடி சேர்ந்து காதல் கிறுக்கனில்வடிவேலுவின் காமெடி படத்திற்கு பலமாக அமைந்தது.

அரசுவில் சரத்குமாருடன் சேர்ந்து வடிவேலு செய்த காமெடி நன்கு ரசிக்கப்பட்டது. விஜயகாந்த்துடன் சொக்கத் தங்கத்திலும் வடிவேலுஅசத்தியிருந்தார்.

வடிவேலுவின் கொடி உயரப் பறந்தாலும், விவேக்கும் சைடில் தனி ஆவர்த்தனம் நடத்தி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். சாமியில் அவர் போட்ட காமெடி பேயாட்டம் இன்னும் கூட சாட்டிலைட் சானல்களில் முன்னணியில் உள்ளது.

தூள், திருமலை, பாய்ஸ், த்ரீ ரோஸஸ் என விவேக்கின் காமெடி அதிகம் பேசப்பட்டது.

வடிவேலு, விவேக் ஒரு பக்கம் கலக்கினாலும், கருணாஸும் கடந்த ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த முக்கிய காமெடியனாகதிகழ்ந்தார். திருடா திருடியில் கருணாஸின் காமெடி அதிகம் ரசிக்கப்பட்டது. பிதாமகனில் காமெடியனாக வந்தாலும் அதிகம்ரசிக்கப்படவில்லை.

இந்தக் காமெடியன்களைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிதாமகனில் சூர்யாவின் அலப்பறையான காமெடி சென்ற ஆண்டின் சிறந்தஆல்ரவுண்ட் நடிகர் என்ற பெயரை சூர்யாவுக்குப் பெற்றுக் கொடுத்தது. காமெடியிலும் தன்னால் கலக்க முடியும் என்பதைபிதாமகன் மூலம் சூர்யா நிரூபித்தார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil