»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பல நல்ல படங்கள் வெளியாகி கோலிவுட்டை தூக்கி நிறுத்திய அதே வேளையில் பல டப்பாப் படங்களும் வந்து கோலிவுட்டின்பாரம்பரியத்தைக் காக்க முயற்சித்த கதையும் 2003ல் நடந்தது.

ஃபிளாப் பட வரிசையில் முதலிடம் பெறுவது ஷங்கரின் பாய்ஸ்.


எந்தப் படத்திற்கும் இத்தகைய கடுமையான விமர்சனங்கள் இதுவரைகிடைத்திருக்காது என்ற ரீதியில் பாய்ஸ் படு காட்டமாக விமர்சிக்கப்பட்டது.

ஜென்டில்மேன், இந்தியன் என நல்ல படங்களைக் கொடுத்த ஷங்கர் பாய்ஸ் மூலம் தனது பெயரை ஒட்டுமொத்தமாக இழந்தார்.

அடுத்த ஜெனரேஷனுக்கு சினிமாவைக் கொண்டு செல்வதாய் நினைத்துக் கொண்டு பலான பட ரேஞ்சில் படம் தந்து திட்டுவாங்கினார்.

அதேபோல,விஜயகாந்த்தின் தென்னவனும் படு அடி வாங்கியது. அவரது ரசிகர்களே படத்தை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு படுமோசமான கதையமைப்டன் வெளியான தென்னவன், கேப்டனின் வேகத்திற்கு தடை போட்டு நிறுத்தியது.

அதேபோல ஐஸ், பவளக் கொடி, பல்லவன், ரகசியமாய், இன்று முதல், ஜூலி கணபதி, காதலுடன், பாப்கார்ன், சேனா, விசில்,தாயுமானவன், விகடன், ஈரநிலம், அலாவுதீன், திவான், சக்ஸஸ், ஆஞ்சநேயா என ஊத்திக் கொண்ட படங்கள் ஏராளம்.

கையை சுட்ட நடிகைகள்:

முன்னணி நடிகைகள் மூன்று பேர் சொந்தப் படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டனர். தேவயானி தனது கணவருக்காக தயாரித்து நடித்தகாதலுடன், ரம்பாவின் த்ரீ ரோஸஸ், மும்தாஜின் தத்தித் தாவுது மனசு ஆகியவை பெரும் தோல்வியைச் சந்தித்தன.

பிரியா ராமனும், கணவர் ரஞ்சித்தும் இணைந்து தயாரித்த பீஷ்மர் சுமாராக ஓடி கையைக் கடிக்காமல் காப்பாற்றியது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil