»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டில் பல கலாட்டாக்களும் கோலிவுட்டை கதி கலங்க வைத்தன.

கமல்ஹாசனின் சண்டியர் படத்திற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கடுமையான எதிர்ப்பு பெரும் சர்ச்சையைஏற்படுத்தியது. கடைசியில் கமல் தனது படத்தின் பெயரை மாற்ற வேண்டியதாயிற்று.

பிரச்சனை அத்தோடு முடியவில்லை. வெளிப்புறப் படப்பிடிப்பிலும் பல தடங்கல்கள் ஏற்படவே, சென்னையில் செட் போட்டு தேனி,மதுரை பக்கத்து கதையை எடுத்து முடித்து விருமாண்டியாக உருமாற்றியுள்ளார் கமல்.

இதேபோல, ஷங்கரின் பாய்ஸ் படத்திற்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. படம் ரிலீஸ் ஆன பிறகு அதில் இடம் பெற்ற ஆபாசவசனங்கள், காட்சிகள் கட் செய்யப்பட்டு திரையிடப்பட வேண்டிய நிலைக்கு ஆளானது.

பாய்ஸ் பட எதிர்ப்புக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இன்று வரை ஷங்கர் ஒரு பதிலும் அளிக்கவில்லை என்பதுதான் இங்கு ஹைலைட்டாககுறிப்பிட வேண்டிய விஷயம்.

பிதாமகன் பட சம்பளப் பிரச்சினை தொடர்பாக விக்ரம், பாலா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சூர்யாவுக்கும் சம்பளப் பாக்கி இருந்ததால் அவரும் அதிருப்தியில் உள்ளார்.

கோவில்பட்டி வீரலட்சுமி படப்பிடிப்புக்காக தேனியில் சிம்ரன் தங்கியிருந்தபோது இதனால் ஊரே தீட்டு பட்டுவிட்டதாகச்சொல்லி ஊரேயை சுத்தம் செய்து தீட்டுக் கழித்தார்கள் அந்த கிராம மக்கள்.

இது சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.

காமெடியன்கள் வடிவேலுக்கும், ஜெயமணிக்கும் ஏற்பட்ட மோதல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருவரும் மாறி மாறி போலீஸில் புகார் செய்தனர். கடைசியில் விஜயகாந்த் தலையிட்டு இரு தரப்பினரையும் ஆசுவாசப்படுத்தி வைத்தார்.

நடிகை ஸ்ரீதேவி கட்டிய அடுக்குமாடி கட்டடத்தை இடிக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டதும் பரபரப்பான செய்தியாக இருந்தது.

விபச்சார வழக்கில் நடிகை வினிதா, டிவி நடிகை புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து சிக்கி அசிங்கப்பட்டனர்.

ரசிகர்களின் ஓவர் ஆர்வத்தால் தனுஷ் கை ஒடிந்தது. சிம்பு, ஸ்ரீகாந்த், சினேகா ஆகியோரும் காயமடைந்து கொஞ்ச காலம்ஷூட்டிங்கிற்குப் போக முடியாத நிலை ஏற்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil