»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

2002ம் ஆண்டை விட அதிக அளவில் கடந்த ஆண்டில் புதுமுக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அறிமுகமாகி கோலிவுட்டுக்குப்புத்துயிர் அளித்தனர்.

புதுமுக நடிகர்களில் ஜெயம் ரவி, புன்னகைப் பூவே நந்தா, பாய்ஸ் சித்தார்த், உன்னைச் சரணடைந்தேன் வெங்கட் பிரபு ஆகியோர் ரசிகர்களின்பாராட்டைப் பெற்றார்கள்.

இதேபோல சதா, சாயாசிங், சோனியா அகர்வால், குட்டி ராதிகா ஆகிய புதிய நடிகைகளும் ரசிகர்களின் மனதில்இடம்பெற்றார்கள்.

இவர்களில் திருடா திருடியில் மன்மதராசாவுக்கு அட்டகாச ஆட்டம் போட்ட சாயாசிங்குக்கு அமோகவரவேற்பு கிடைத்தது.

இவர்கள் தவிர கீது மோகன்தாஸ், நந்தனா, அமோகா, பூஜா ஆகியோருக்கும் ரசிகர்கள் தங்களது இதயங்களில் ஒரு இடத்தைஒதுக்கிக் கொடுத்தனர்.

இயக்குனர்கள்:

இதேபோல புதுமுக இயக்குனர்களில் செல்வராகவன், சுரேஷ், கரு. பழனியப்பன், சுப்பிரமணிய சிவா, சமுத்திரக்கனி, இளங்கண்ணன்,ரமணா, ஜனநாதன் ஆகியோர் கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil