»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

2003ல் படங்கள் மட்டும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பரபரப்பான செய்தியாகமாறின.

கமல்ஹாசனும், சரிகாவும் பிரிந்தனர். குழந்தைகளுடன் மும்பைக்கு சரிகா சென்று விட, சிம்ரனும் கமலைக் கைவிட, புதிதாய்க்கிடைத்த கெளதமியுடன் நட்பைப் புதுப்பித்துக் கொண்டு கவலையின்றி விருமாண்டி படத்தில் மூழ்கி விட்டார் கமல்.

அதேபோல, ரகுவரன்-ரோகிணி ஜோடியும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ரகுவரனின் சில கெட்ட பழக்கங்களை சகிக்கமுடியாத அளவுக்குப் போன ரோகிணி அவரைப் பிரிந்தார்.

இருந்தாலும் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சிகளும் தொடர்ந்துகொண்டே தான் உள்ளன.

பார்த்திபன்- சீதா பிரிவும் பரபரப்பான செய்தியாக இருந்தது.

பார்த்திபனுக்கு பல நடிகைகளுடன் தொடர்பு என சீதா பாய்ந்தார்.சீதாவுக்கு டிவி நடிகருக்கும் தொடர்பு என செய்திகள் வந்தன.

ரேவதியும், சுரேஷ் மேனனும் பிரிந்து விட்டதாக நாடகமாடினர். ஜோதிடப்படி சிறிது காலம் தனித்தனியே பிரிந்திருக்க வேண்டும்என்று சொல்லப்பட்டதே இதற்குக் காரணம். இருவரும் இணைந்து இந்திப் படமொன்றை எடுத்து வருகிறார்கள்.

அதே போல இந்த ஆண்டு கல்யாணம் கட்டிக்கிட்ட ஜோடிகளும் நிறையவே. மூத்த நடிகைகளான ரம்யா கிருஷணன், செளந்தர்யாசெட்டில் ஆயினர்.

ராஜி சுந்தரம்- கமலுக்கு குட் பை சொன்ன சிம்ரன் தனது புதிய காதலரை மணந்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil