»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டைப் போலவே, 2003லும் பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி சக்கை போடு போட்டன.

பரவை முனியம்மாவின் சிம்மக் குரலில் ஒலித்த ஏ சிங்கம் போல நடந்து வர்றான் செல்ல பேராண்டி பாட்டு பெரும் ஹிட் ஆனது.

அதேபோல கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா பாடலும் ஹிட் ஆனது.

ரொம்ப நாட்களாக ஓ போட்டுக் கொண்டிருந்த ரசிகர்களை மன்மத ராசா பைத்தியமாக்கி அலைய வைத்தது.

நகரம் முதல்பட்டிதொட்டி வரை மன்மத ராசா பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

ஒற்றனில் இடம் பெற்ற சின்ன வீடா வரட்டுமா என்ற பாடலும் ரசிக மகா ஜனங்களை சுண்டி இழுத்துக் கொண்டது.

ஏ.ஆர். ரஹ்மான் இந்த ஆண்டு தமிழில் அவரது இசையில் மூன்று படங்கள் வெளிவந்தாலும், பெரிதாகஎதையும் சாதிக்கவில்லை. அவரது இசையில் வெளியான சமீபத்திய பாடல்கள் ஹிட் ஆகாதநிலையில் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேண்டுமடா பாடல் மட்டுமேஓரளவுக்கு பிரபலமானது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் தேவதையைக் கண்டேன் பாடல் சிறந்த மெலோடி ரகமாகஅங்கீகரிக்கப்பட்டது. கேசட் விற்பனையும் சக்கைபோடு போட்டது.

இத்தனைக் களேபரங்களுக்கு மத்தியில் தென்றல் போல வந்து அத்தனை பேரின் இதயத்தையும் வருடியது பிதாமகனில் இளையராஜாமெட்டமைத்த எளங்காத்து வீசுதே தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil