»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

2003ம் ஆண்டில் அதிக தமிழ்ப் படங்களில் நடித்தவர் மாதவன்தான்.

இதில் அன்பே சிவம், நள தமயந்தியில் மாதவனின் நடிப்பு மிகவும்பேசப்பட்டது.

லேசா லேசாவிலும் அவரது நடிப்பு பாராட்டப்படும் விதத்தில் இருந்தது. சின்ன கேரக்டரில் வந்தாலும் ஹீரோ ஷாமையேஓரங்கட்டும் விதத்தில் அசத்தியிருந்தார். பிரியமான தோழியிலும் நன்றாக நிடித்திருந்தார்.

படத்தின் வசூலும் சொல்லிக் கொள்ளும்படிஇருந்தது. ஆனால், சரணை நம்பி இவர் நடித்த ஜேஜே படம் பெரும் சறுக்கலைக் கொடுத்துவிட்டது.

விக்ரம் நான்கு படங்களில் நடித்திருந்தார். இதில் சாமி, தூள், பிதாமகன் ஆகிய மூன்றும் படு ஹிட்.

அவரது ஸ்டார் அந்தஸ்தை எங்கேயோகொண்டு போய் நிறுத்திவிட்டன. காதல் சடுகுடு மட்டும் சுமாராகப் போனது.

மூத்த ஹீரோ வரிசையில் உள்ள சத்யராஜும் நான்கு படங்களில் நடித்திருந்தார்.

மிலிட்டரிகொஞ்சம் வசூல் தந்தாலும் ராமச்சந்திரா, சேனா, ஆளுக்கொரு ஆசை ஆகியவற்றை எடுத்ததயாரிப்பாளர்கள் தலையில் துண்டு தான் மிஞ்சியது.

விஜய் நடித்த வசீகரா, புதிய கீதை ஆகியவை சுமாராகவே போயின. இந்தத் தோல்விகளை திருமலைமூலம் துடைத்து எறிந்தார் விஜய்.

இவர்கள் தவிர விஜயகாந்த், பிரபு, அர்ஜூன், சூர்யா, ஸ்ரீகாந்த், சிம்பு, தனுஷ், ஷாம் ஆகியோர் தலா2படங்களில் நடித்திருந்தனர்.

இதில் சூர்யாவுக்கு பிதாமகனும், காக்க காக்கவும் நல்ல பெயரைக் கொடுத்து ரசிகைகளின்எண்ணிக்கையையும் அதிகரித்துவிட்டன.

அத்தோடு தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில்ஒருவராகிவிட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் எதுவும் கடந்த ஆண்டு வெளியாகவில்லை.

அடுத்தஆண்டிலாவது ரஜினியின் படத்தை எதிர்பார்ப்போம்.

ஹீரோயின்கள்:

நடிகைகளில் ஜோதிகா, திரிஷா, கிரண் ஆகியோர் தலா 5 படங்களில் நடித்தனர்.

ஜோதிகா நடித்த படங்களில் 3 படங்கள் ஹிட் ஆகின.

திரிஷா நடித்தவற்றில் ஒரு படம் மட்டுமேசூப்பர் ஹிட் ஆனது. கிரண் நடித்த 5 படங்களும் படு தோல்வியைத் தழுவியது. அவரும் பீல்ட்அவுட் ஆகி ஜெய்ப்பூருக்கே பறந்து விட்டார்.

இசையமைப்பாளர்கள்:

இசையமைப்பாளர்களைப் பொருத்தவரை தொடர்ந்து தேவாதான் அதிக படங்களுக்குஇசையமைத்துள்ளார்.

மொத்தம் 17 படங்களுக்கு அவர் இசை அமைத்தார்.

2வது இடத்தைப் பிடித்தவர் வித்யாசாகர், அவரது கணக்கு 12. இளம் புயல் யுவன்ஷங்கர் ராஜா 7படங்களுக்கும், அவரது தந்தை இளையராஜா 4 படங்களுக்கும், எஸ்.ஏ.ராஜ்குமார் 4 படங்களுக்கும்,சிற்பி 4 படங்களுக்கும் இசையமைத்திருந்தனர்.

ஏ.ஆர். ரஹ்மான் 3 படங்களுக்கும், அவரது சிஷ்யர் ஹாரிஸ் ஜெயராஜ் 3 படங்களுக்கும், பரத்வாஜ்3 படங்களுக்கும் இசையமைத்திருந்தனர். மணிசர்மாவும் 3 படங்களுக்கு இசை அமைத்திருந்தார்.தினா, பரணி, கார்த்திக்ராஜா ஆகியோர் தலா 2 படங்களுக்கு இசையமைத்திருந்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil