»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

2003ம் ஆண்டை கோலிவுட்டின் பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு ரிலீஸ் ஆன படங்களில் பெரும்பாலானவை படுவெற்றியைப் பெற்று தமிழ்த் திரையுலகுக்கு புத்துயிர் ஊட்டின.

இந்த ஆண்டு மொத்தம் 209 படங்கள் வெளியாயின. இதில் நேரடித் தமிழ்ப் படங்கள் 102. மற்ற படங்கள் மொழி மாற்றுப்(டப்பிங்) படங்கள். அதிலும் ஆங்கில மொழி மாற்றுப் படங்களும் சக்கை போடு போட்டு நல்ல வசூலைக் கொடுத்தன.

ஜனவரியில் வெளியான படங்களில் தூள் நல்ல வசூலைத் தந்தது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அன்பேசிவம் சுமாராகவேஓடி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் மிகுந்த பாராட்டைப் பெற்றது.

விஜய்காந்தை- மார்க்கெட் போன பாக்கியராஜ்போன்றவர்களை வைத்து தயாரிக்கப்பட்ட சொக்கத்தங்கம் எதிர்பார்த்தது போலவே பெரும் தோல்வியைத் தழுவியது.

பிப்ரவரியில் வெளியான ஜூலி கணபதி பேசப்பட்டது.

ஆனால் வசூல் சரியில்லை. சத்யராஜ் நடிப்பதையே நிறுத்திவிடலாம் என மக்கள் மனதில் ஆதங்கத்தை ஏற்படுத்திய படமாக மிலிட்டரி திரைப்படம் அமைந்தது.

மார்ச்சில் வெளியான படங்களில் ஒன்றுமே திருப்தியைத் தரும் வகையில் வசூலைக் கொடுக்கவில்லை. ஆனால் அன்பு படம் கொஞ்சம்பேசப்பட்டது.

ஏப்ரலில் தம், அரசு, பந்தா பரமசிவம், புன்னகை பூவே ஆகியவை நன்கு ஓடி தயாரிப்பாளர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தன.

மே மாதம் வெளியான சாமி, தமிழ் திரையுலகில் பெரும் சாதனை படைக்கும் அளவுக்கு வசூலை அள்ளியது. விக்ரம் சூப்பர் ஸ்டார்அந்தஸ்துக்கு உயர சாமி பெருமளவில் உதவியது. தியேட்டர்களில் திருவிழாக் கூட்டத்தைக் காண முடிந்தது. விஜய்யின் புதிய கீதை காலைவாரியது. பார்த்திபன் கனவு ஓரளவுக்கு வசூலைக் கொடுத்தாலும் நல்ல படமாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

ஜூன் மாதம் வெளியான ஜெயம் பெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. கமல்ஹாசனின் நள தமயந்தியும் நில்ல வசூலைக்கொடுத்ததோடு மாதவனின் நடிப்பும் பேசப்பட்டது.

தனுஷ் நடித்து வெளியான காதல் கொண்டேன் ஜூலை மாதத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றியைக் கொடுத்த படம்.

அதிகம்எதிர்பார்க்கப்பட்ட கோவில்பட்டி வீரலட்சுமி ரசிகர்களின் ஆதரவைப் பெறத் தவறியது, ஆயினும் சிம்ரனுக்காக கொஞ்ச நாள்ஓடியது.

ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆன காக்க காக்க சூர்யாவுக்கு ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்ததோடு, மாபெரும் ஹிட் ஆகியது.

தயாரிப்பாளர் தாணுவுக்கு கோடிகளைக் குவித்தது. தமிழில் வெளியான முதல் ஹாலிவுட் தரப் படமாக காக்க காக்கபார்க்கப்படுகிறது.

பாரதிராஜாவின் ஈர நலம் தோல்வியைத் தழுவியது. விஜயகாந்த்தின் தென்னவன் அதைவிட பெரும்தோல்வியை சந்தித்தது. ஷங்கரின் பாய்ஸ் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததோடு தயாரிப்பாளருக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்ஏற்படுத்தியது.

செப்டம்பரில் வெளியான திருடா திருடி, புதிய வசூல் சாதனையை நிகழ்த்தியது. பட்டிதொட்டியெங்கும் மன்மத ராசாவின் கூக்குரல் பாடாய்படுத்தியது. தனுஷ் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார்.

தனுஷ் அலை காரணமாக சிம்பு நடித்து வெளியான அலை பட் படுதோல்வியைச்சந்தித்தது.

உன்னைச் சரணடைந்தேன், பீஷ்மர், வின்னர் ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றாலும் வசூலில் பெரியஅளவில் சாதிக்கவில்லை.

அக்டோபரில் ரிலீஸ் ஆன பிதாமகன், திருமலை, ஒற்றன் ஆகியவை நல்ல வசூலைக் கொடுத்தன.

பிதாமகன் தமிழ் சினிமாவின் பலஇலக்கணங்களை உடைத்தெறிந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

அஜீத்தின் ஆஞ்சநேயா வந்த வேகத்தில் தியேட்டர்களை விட்டு ஓடியது.

பொன்வண்ணனின் நதிக் கரையினிலே, ஷாமின் இயற்கை ஆகியவை நல்ல படங்களாக நவம்பரில் வெளிவந்தன. ஆனால் வசூல் திருப்தியைத்தரவில்லை. சரணின் ஜேஜே மிகப் பெரும் தோல்வி கண்டது.

டிசம்பரில் வெளியான படங்களில் ஜூட், ஹிட் பட வரிசையில் சேர்ந்துவிட்டது. காதல் கிறுக்கன் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.விக்னேஷ் வித்தியாசமான கெட்டப்பில் நடித்த சூரியும் ஓரளவு நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

மும்தாஜின் சொந்தப் படமான தத்தித்தாவுது மனசு படுதோல்வியைச் சந்தித்தது.

மொத்தத்தில் 2003ம் ஆண்டு வெளியான நேரடித் தமிழ்ப் படங்களில் பல படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் திருப்திதரும் வகையில் இருந்தன. தோல்விப் படங்களின் எண்ணிக்கை குறைந்தது.

கதையில் அக்கறை காட்டியது, புதுமுகங்களின் ஆர்வமான, ஈடுபாடான நடிப்பு, வித்தியாசமான டைரக்ஷன் என பல நல்ல அம்சங்களில்தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கவனம் செலுத்தியதே கோலிவுட்டின் புதிய எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil